பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

191


சரோஜினியைச் செல்வன் பாலகிருஷ்ணன் என்பவருக்கு கோவையில், 1944-ஆம் ஆண்டில், அப்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர். ஹார்தர் ஹோப் எனும் வெள்ளைக்காரர் தலைமையில் திருமணம் செய்து கொடுத்தேன்.

அந்தத் திருமணத்ற்கு புரோகிதரை அழைக்கவில்லை. சுயமரியாதைத் திருமணம்தான் நடத்தினேன். அந்தத் தம்பதிகள் ஊர் போற்றும் அளவிலே சீரோடும் - சிறப்போடும்தான் வாழ்ந்து வந்தார்கள். திருமணப் பொருத்தமோ, ஜாதகப் பொருத்தமோ, நாள், நட்சத்திரப் பலமோ எதையும் பாராமல் திருமணம் நடந்ததால், அந்த தம்பதிகள் வாழ்க்கை ஒன்றும் சீர்குலையவில்லை' என்று திரு. நாயுடு அந்தப் பத்திரிகையில் பேட்டிக் கொடுத்தார்.

திரு. ஜி.டி. நாயுடு
புகழில் மறைந்தார்!

ஒரு முறைக்குப் பலமுறை உலகமெலாம் கற்றிச் சுற்றி, தமிழ் நாட்டின் விவசாயத் தொழில், பொறியியல் தொழில், புரட்சிக் கல்வியியல், விஞ்ஞானக் கருவிகள் கண்டுபிடிப்புகள், மோட்டார் மன்னராக விளங்கி, உழைத்த உழைப்பியல், சித்த வைத்திய இயல் போன்ற பலவற்றுக்கும் மேதையாகத் திகழ்ந்த, செயற்கரிய செய்த செயல் வீரர் கோவை ஜி. துரைசாமி எனப்படும் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் 4.1.1974 ஆம் ஆண்டன்று மறைந்து விட்டார் என்ற செய்தி உலக விஞ்ஞானிகள் இடையேயும், தமிழ்த் தொழிலியல் தோழர்கள் இடையேயும், அதிர்ச்சியை உருவாக்கி விட்டது.

1973-ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அவர் உடல் தளர்ந்து நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அவர் இறந்து விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நாளுக்கு நாள் உடல் சோர்வும், மனத் தளர்வும் குன்றியதால், மேலே குறிப்பிட்ட நாளில் எந்தவித சிரமும் இல்லாமல் தமிழ் மண்ணில் கலந்தார்; காலத்தோடு காலம் ஆனார்! ஏறக்குன்றய 80 ஆண்டுகள் ஓயாது உழைத்த உலகம் சுற்றிய உடல் புகழுக்கு இரையானது.

கொடை வள்ளல் திரு. ஜி.டி. நாயுடு மரணமடைந்ததைக் கேட்ட அவரது அணுக்க நண்பர் திரு. இராமசாமி அய்யர், அழுது,