பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


அந்த வலி நீக்கி மருந்தை, சிறிது லாபம் சேர்த்து, யார் நோயோ, அவர்கட்கு எல்லாம் அந்த மருந்தைக் கிராம மக்களின் வலி நோய்களைப் போக்கினார்.

வலி நீக்கி மருந்தோடு, நில்லாமல், கடிகாரங்கள், ஆர்மோனியப் பெட்டிகள் போன்ற பொருட்களையும் வாங்கி விற்று, ஏறக்குறைய 600 ரூபாய் வரை சம்பாத்யம் செய்தார் துரைசாமி.

துரைசாமி தந்தையார் வைத்திருந்த தோட்டங்களைப் போல அப்போது பல தோட்டங்களில் தோட்ட வேலை செய்பவர்கள் இருந்தர்கள். அவர்களில் ஆண்களுக்கு மூன்றணாவும், பெண்களுக்கு இரண்டனவும் தோட்ட முதலாளிகளால் கூலி கொடுக்கப்பட்டு வந்தது.

தோட்டத் தொழிலாளர் :
போராட்டத் தலைமை!

ஏழைக் குடியானவர்களுக்கு இந்தக் கூலி போதாது என்பது துரைசாமி வாதம், அதற்காக அவர், ஏழைக் கூலியாட்களை ஒன்று திரட்டிக் கொண்டு தோட்ட முதலாளிகளிடம் சென்று நாள் ஒன்றுக்கு மூன்றணா இரண்டணா கூலி கொடுப்பது போதாது என்று துரைசாமி வாதாடினார்.

தோட்ட முதலாளிகள் துரைசாமியின் மனித நேயத்தையும், தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை நிலைகளையும் நெஞ்சா உணர்ந்து, குடியானவர்களுக்குரிய நியாயமான ஊதிய உயர்வை வழங்கினார்கள். இதனால் துரைசாமிக்கு குடியானவர்கள் இடையே மதிப்பும், மரியாதையும் உயர்ந்தது.

பொது மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், நியாயமான வாழ்க்கை உரிமைகளுக்காகவும் போராடி வெற்றி பெருமளவுக்கு ஊரிலும், தோட்ட முதலாளிகள் இடையேயும் மதிப்பும் மரியாதையும் துரைசாமிக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வரவே, கோபால்சாமி தனது மகனுக்குத் திருமணம் செய்திட முனைந்தார்.

குறும்பரை அடக்க :
திருமணம் செய்தார்!

திருமணம் செய்து வைத்து விட்டால் மகனுடைய குறும்புத்தனங்கள் அடங்கிவிடும் என்ற எண்ணத்தில் கோபால்சாமி நாயுடு