பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

29


அப்போது அந்த வெள்ளையருக்குக் கொஞ்சம் மண் எண்ணெயும், கந்தைத் துணியும் தேவைப்பட்டது. மோட்டார் சைக்கிள் பழுதடைந்த இடம் கலங்கல் ஊராக இருந்தால், வேறு எவரும் அவற்றைக் கொடுக்க முன் வருவார்கள். ஆனால், இந்த இடம், ஊரைத் தாண்டியுள்ள தோட்டப் பகுதிகள்! எனவே, துரைசாமியிடம் அவற்றைக் கேட்டார் லங்காஷயர்!

துரைசாமி தனது தோட்ட வீட்டுக்குச் சென்று, மண் எண்ணெயையும், கந்தைத் துணியையும் எடுத்துக் கொண்டு வந்து அந்த வெள்ளையரிடம் கொடுத்தார்: சைக்கிள் இஞ்சினில் அந்த வெள்ளைக்காரர் என்ன பழுது பார்க்கிறார், எப்படிப் பார்க்கிறார் என்பதை உற்று நோக்கியவாறே, கூர்ந்து கவனித்தார். சிறிது நேரத்தில் லங்காஷயர் தனது மோட்டார் சைக்கிளைச் சரி செய்து விட்டார். அந்த வண்டியிலே அவர் ஏறி அமர்ந்து கொண்டு துரைசாமிக்கு நன்றியைக் கூறிவிட்டுக் கோவை நகர் சென்றார்.

கூர்ந்துக் கவனித்த, மோட்டார் சைக்கிளின் பழுது பார்த்த சம்பவம், துரைசாமி மனத்திலே ஆழமாகப் பதிந்து விட்டதால், இரவும்-பகலும் தானும் மெக்கானிக்காக ஆக வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு உந்தச் செய்தது. இதே ஊக்கம்தான், பிற்காலத்தில் துரைசாமி ஒரு பொறியியல் வல்லுநராகும் வாய்ப்பையும் வழங்கியது எனலாம்.

கலங்கல் கிராமத்தையும், தாய் மாமன் கிராமமான இலட்சுமி நாயக்கன் பாளையத்தையும், தனது தோட்ட வீட்டையும்-வயற்பரப்புகளையும் தவிர, வேறு எங்கும் சென்றதில்லை; பார்த்ததில்லை துரைசாமி.

எப்போது பார்த்தாலும் தோட்டமே கதியெனக் கிடந்து உழன்று கொண்டிருந்த துரைசாமிக்கு, லங்காஷயர் என்ற அரசு அதிகாரி மேட்டார் சைக்கிளில் வந்து போனதைக் கண்டதிலிருந்தும், அவரிடம் உரையாடிய மகிழ்ச்சியிலிருந்தும் ஒரு புதுமையான மனக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு விட்டது.

பதினாறு மைல் நடந்தே :
கோவை சென்றார்!

துரைசாமி தான் பிறந்த நாளிலிருந்து அன்று வரை உந்து வண்டியையோ, பேருந்துவையோ, புகை கக்கும் ரயில்