பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


வேலையிலும், கலக்கிலும் துரைசாமி மிகத் திறமையாகவும், நாணயத்தோடும் நடந்து வந்த தொழில் ஒழுக்கம்; அவரது முதலாளிக்கு மிகவும் பிடித்திருந்ததால், துரைசாமி அங்கு எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்க சம்பவமாகும்.

கோபால்சாமி நாயுடு, அதாவது துரைசாமியின் தந்தை; ஒரு நாள் பருத்திப் பொதிகளை அந்த ஆலையிலே கொட்டை நீக்கி எடைபோட வந்தார். தனது மகன் அங்கே தலைமை எடையாளராகப் பணியாற்றுவதைக் கண்டு அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

பருத்தியை எடை போட்டபோது, தந்தை கோபால்சாமி நாயுடு தனது மகன் துரைசாமியைப் பார்த்து, “எனக்கும் அதே விதிதானா? முதலாளியிடம் சொல்லக் கூடாதா?” என்றார்.

துரைசாமி தனது தந்தையைப் பார்த்து. ‘உங்களுக்கு... அதே விதியன்று: பாரத்துக்குப் பத்து ராத்தல் குறைக்கப்படும்’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

உடனே கோடால்சாமி முதலாளியிடம் சென்று,‘நடந்ததைக் கூறினார். அதற்கு அந்த எசமான், துரைசாமி சொன்னால் சொன்னதுதான்! அதுவும உங்களுடைய விவகாரத்தில் உங்களுடைய மகன் சொன்னதும் சரிதான்’ என்றார்.

மகன் செய்த செயல் நேர்மையானதுதான்; அவனைக் கேட்டது தவறு. அதனால்தான் தகப்பன் என்ற உறவுக்காக பத்து ராத்தல் குறைத்து எடை போட்டிருக்கிறான் என்று எண்ணி, மகனது நேர்மையைப் பாராட்டி மகிழ்ந்தார்.

வேலையில் சேரும்போது துரைசாமி தனது முதலாளியிடம் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தார் அல்லவா? அந்தக்கெடு வந்துவிட்டது.

ஒரு நாள் இரவு, சிங்காநல்லூர் முக்கிய சாலை ஒன்றில் முதலாளி தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, துரைசாமி தனது ஏசமாரிடம் சென்று: தான் பணி செய்யும் ஆலைப் பிரிவின் திறவுகோலைக் கொடுத்து. “ஐயா, இன்றுடன் நமது இரண்டாண்டுக் கால வேலை ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இனி, தங்களது ஆலையில் பணி புரியமாட்டேன். தயவு செய்து எனக்கு விடுதலை கொடுங்கள்” என்று துரைசாமி கேட்டார்.