பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

39


கொண்டிருந்தார். துரைசாமி எத்தகையர் என்பதை அவர் அறிந்தவர். அதனால் அவரிடம் சென்று, தங்களது மோட்டார் நிறுவனத்தில் எனக்கு ஓர் இயந்திரம் சார்பான மெக்கானிக் வேலையைத் தந்து உதவுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார் துரைசாமி.

ஒரே ஒரு பேருந்து :
வாங்கி ஒட்டினார்:

அவர் மீது இரக்கப்பட்ட ஸ்டேன்ஸ், “முதலில் நீ பஞ்சு வியாபாரத்தை விட்டு விடு. என்னிடத்தில் எந்த வேலையும் உனக்குத் தரக் கூடிய தகுதியில் இல்லை. உன்னுடைய திறமை, முயற்சி, எதையும் மீண்டும் வீணடிக்காதே! உனக்கு நான் கூறும் யோசனையைக் கேள். ஒரு பேருந்து வாங்கி அதை வாடகைக்கு ஒட்டு. அதற்கு எட்டாயிரம் ரூபாய் தேவைப்படும். நான் உனக்கு நான்காயிரம் தருகிறேன். மீதியுள்ள நான்காயிரம் ரூபாயை உனது நண்பர்களிடமோ, வேறு யாரிடமோ பெற்று, பேருந்து ஒன்றை வாங்கி ஓட்டு” என்றார் ஸ்டேன்ஸ்!

ஆங்கிலேயரான ஸ்டேன்ஸ் கூறிய அறிவுரையை துரைசாமி ஏற்றுக் கொண்டு; அவர் அளித்த வாக்குக்கு ஏற்றவாறு நான்காயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டார். நமது நண்பர்கள் சிலரைச் சந்தித்து ரூபாய் நான்காயிரத்தையும் திரட்டினார். பேருந்து ஒன்றை விலைக்கு வாங்கினார்.

சொந்தத் தொழில் :
செய்வோர்க்கு அறிவுரை!

கோவையில் அப்போது புகழ்பெற்று விளங்கியவரும், தேவக் கோட்டை நகரைச் சேர்ந்தவருமான திரு. பி.எஸ்.சோமசுந்தரம் செட்டியார், துரைசாமியை அழைத்து, “தம்பி, எந்தத் தொழிலை நீ செய்தாலும் வரும் வருவாய்ப் பணத்தில் பாதிப் பகுதியை முதலுக்கு என்று எடுத்து வைத்துவிடு, மீதியை அந்த முதலின் பாதுகாப்புக்காகக் கையில் வைத்துக் கொள். அது உனக்கு நல்லது” என்ற அறிவுரையைக் கூறினார். அந்த அறிவுரையைத் துரைசாமியும் பின்பற்றினார்.

துரைசாமி விலைக்கு வாங்கிய அந்தப் பேருந்து, 1920-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி என்ற நகரிலே இருந்து; தமிழ்த் தெய்வமாக