பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


மக்கள் போற்றி வணங்கும் முருகப் பெருமான் தெய்வத் தலமான பழநி நகருக்கு ஓட ஆரம்பித்தது. துரைசாமியே அதற்கு ஒட்டுநராகவும் இருந்தார்.

முதலாளியும் துரைசாமியே, தொழிலாளியும் அவரே என்ற நிலையிலே அந்தப் பேருந்து பணியாற்றியதால், மக்கள் இடையே நாளுக்கு நாள் செல்வாக்குப் பெற்று, வருவாயும் பெருகி, செலவினமும் சுருங்கியதால் துரைசாமியிடம் செல்வம் பெருகியது.

ஒரு முறைக்கு இரு முறை பஞ்சு வியாபாரத்தில் துரைசாமி பெருத்த நட்டமடைந்த சம்பவமே அவருக்குரிய பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைந்ததால், தான் பெற்றக் கடன்களையும் திருப்பிக் கொடுத்தார். செல்வமும் அவரிடம் முன்பு போல குவிந்தது.

அமெரிக்காவில் எப்படி ரூத்தர் ஃபோர்டு, மோட்டார் மன்னன் என்று புகழ் பெற்றாரோ, அதைப் போலவே இந்தியாவிலும் புகழ்பெற்ற ஒரு மோட்டார் மன்னனாகவே துரைசாமி திகழ்ந்து வங்கார்.

பேருந்து துறையில் :
நாயுடு செய்த புரட்சி!

மோட்டார் மன்னராக மட்டுமா விளங்கினார்? பேருந்துகள் பயணம் செய்யும் சாலைகள் விவரங்களையும், அதைப் பற்றிய துணுக்கங்களையும் நன்றாக அவர் அறிந்தார். பேருந்து ஒட்டுநராக இருந்த துரைசாமி, மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட பொறியியல் திறமையாளராகவும் விளங்கி வந்தார்.

ஒரே ஒரு பேருந்துக்கு முதலாளியாக இருந்த துரைசாமி நாயுடு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் எல்லாம் தனது பேருந்துகள் ஓடுமளவுக்கு அதிகப்படியான பேருந்துகளை விலைக்கு வாங்கியும், மோட்டார் தொழிற்சாலையை உருவாக்கி, பேருந்துகளை உற்பத்திச் செய்யுமளவுக்கும் உயர்ந்தார்.

கோவை மாவட்டம் முழுவதுமல்லாமல், நீலகிரி மாவட்டம், மதுரை மாவட்டம், திருவாங்கூர் - கொச்சி - சமஸ்தானங்களின் முக்கிய மாவட்ட நகரங்களையும் இணைக்குமளவுக்கு அவரது