பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

41


பேருந்துகள் ஏராளமாக, அடிக்கடி குறித்த நேரத்தில் ஒடிக் கொண்டே இருப்பதைப் பார்க்கலாம்.

யுனைடெட் மோட்டார் சர்விஸ் என்ற ஒரு நிருவாகம் யு.எம்.எஸ். என்ற பெயரில் கோவை நகரில் உருவானது. அதன் நேரடி நிர்வாகம் துரைசாமி நாயுடு மேற்பார்வையிலே இயங்கியது. இந்த நிருவாகத்தில் மட்டும் இருநூறு பேருந்துகள் இருக்கின்றன.

அந்த இரு நூறு பேருந்துகள், ஏறக்குறைய பல சாலைகளில் 15 ஆயிரம் மைலுக்கு மேல் தினந்தோறும் ஓடிக் கொண்டிருக் கின்றன. அதனால், நாள்தோறும் 10 ஆயிரம் பயணிகள் அந்தப் பேருந்துகளிலே பயணம் செய்து வருகிறார்கள். இவ்வளவு பெரிய மோட்டார் நிருவாகத்தில் எவ்வளவு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் தெரியுமா? ஏறக்குறைய ஓராயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் அந்த நிருவாகத்தில் வேலை செய்கிறார்கள்.

பஞ்சு ஆலையில் எடை நிறுத்தலின் தலைமைத் தொழிலாளியாகவும், உணவு விடுதியில் வேலை கிடைக்குமா என்று வேலை கேட்டு, மாதம் பன்னிரண்டு ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்த ஓர் உணவு விடுதி ஊழியராக இருந்தவரிடமும், ஆயிரத்துக்கும் மேலாகத் தொழிலாளர் ஊழியம் செய்கிறார்கள் என்றால், இது என்ன சாமான்யமான உழைப்பிலே உருவான பலனா? எவ்வளவு உழைப்பை மூலதனமாக்கி இருப்பார் துரைசாமி நாயுடு என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்குத்தான், அவரது அருமையையும் பெருமையையும் உணர முடியும்!

U.M.S. நிறுவனம் :
உருவானது எப்படி?

ஆயிரம் தொழிலாளிகள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தை உருவாக்கி விட்டால் மட்டும் போதுமா! அந்த நிருவாக அமைப்பு முழுவதையும் தற்கால வசதிகளோடு உருவாக்கினார்! தற்கால வசதி என்றால், அமெரிக்கத் தொழில் நிறுவனம் ஒன்று தற்கால வசதிக் கேற்றவாறு எப்படிப்பட்ட முறையில் அமைந்திருக்கின்றதோ, அப்படிப்பட்ட முறையிலே அதை அமைத்தார் துரைசாமி நாயுடு.

அந்த மோட்டாா நிருவாகத்தைத் துறை வாரியாக, எவ்வாறெல்லாம் பிரித்துத் தனித் தனியாக இயங்கினால்