பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


இதுதான் திரு.நாயுடு அவனுக்குக் கொடுத்த வேலை. எப்படி வேலை? இதனால் என்ன நன்மை நிறுவனத்துக்கு?

அந்த வாலிபனுக்கு இலவசப் பயணச் சீட்டு வழங்கப் பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட அந்த வாலிபன் தினந்தோறும் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டே இருப்பான். ஆனால், அவன் யாருடனும் பேச மாட்டான். இது நாயுடு உத்தரவு. இரவு ஏழு மணி வரை பயணம் செய்துவிட்டு, அன்று இரவு எட்டு மணிக்கு திரு.நாயுடுவை அலுவலகத்தில் சந்திப்பான்.

பத்தே பத்து நிமிடங்கள்தான் அவனை நாயுடு தனது அறையில் உட்கார வைப்பார். பிறகு வீட்டிற்கு அனுப்பி விடுவார். அந்த பத்து நிமிடத்தில் கூட பேசமாட்டார். இவ்வாறு அவன் முப்பது நாட்கள் எல்லாப் பேருந்துகளிலும் சென்றபடியே இருந்தான்.

வருமானம் பெருக :
இது ஒரு புரட்சி வழி!

இதனால் என்ன நன்மை நிறுவனத்துக்கு? என்றால், யு.எம்.எஸ். பேருந்துகளின் வசூல் தினந்தோறும் அதிகமாகிக் கொண்டே சென்றது. அதாவது, 15 சத விகிதம் வழக்க வசூலுக்கு மாறாக உயர்ந்து கொண்டே சென்றது. என்ன காரணம் அந்த வசூலுக்கு?

பேருந்துகள் நடத்துனரும், ஒட்டுநரும் அந்த வாலிபனைப் பேருந்து சோதனையாளன் என்று எண்ணிக் கொண்டார்கள். பய பக்தியுடன், மரியாதையுடன், அன்புடன் பயணிகளிடம் தொழிலாளர்கள் நடந்து கொண்டு, வசூல் பொறுப்பிலேயே கண்ணும் - கருத்துமாக அவரவர் தொழிலையே தொழிலாளர்கள் செய்து வந்தார்கள். அந்த வாலிபனுடைய வேலையால் யு.எம்.எஸ். நிறுவனத்தில் தூய்மை உருவானது. இந்த வாலிபனுக்கு நாயுடு அவர்கள் வேலை வழங்கித் தனது நிறுவனத்தைச் சோதனை செய்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

ஹென்றி ஃபோர்டும் :
ஜி.டி. நாயுடுவும்!

அமெரிக்க மோட்டார் தொழில் வித்தகரான ஹென்றி ஃபோர்டு, அவரிடம் பணியாற்றிய தொழிலாளர்களை நிறுவனத்தில்