பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

51


வேண்டிய நடந்த பணிகளை நடத்துமாறு கட்டளையிடுவார். நடக்க வேண்டிய வேலைகளையும் தெரிந்து கொள்வார். அதற்கான வழி முறைகளையும் கூறுவார்.

பேருந்துகள் அலுவலகத்துக்கும், அங்கு தங்கியுள்ள பயணிகள் அறைக்கும் தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள வேண்டியதையும், செய்ய வேண்டியச் செயல்களையும் கூறிக்கொண்டே இருப்பார்.

தொலை பேசிகளுக்கு ஒய்வே இருக்காது. இவ்வாறு திரு. நாயுடு காலத்தை வீணாக்காமல், பொன் போல போற்றும் பண்பாளர் ஆவார். அந்த வசதிகளை எல்லாத் துறை அறைகளுக்கும் செய்து கொடுத்துள்ளார் என்பதே அவரது நிர்வாகத்தைப் போற்றுபவர் களும், பாராட்டுபவர்களும் கூறுவார்கள்.

திரு. நாயுடு நிர்வாகம் பற்றி எவராவது குறை கூறினால், உடனே அதைத் திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார். மறு நிமிடம் அக்குறைகள் எல்லாம் நிறைவு பெறும். அவ்வளவு வேகமாக ஆங்காங்கே செயல்கள் நடந்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

ஓர் இரவு கோப்புகள் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கும், மேசைகளுக்கும் சென்று சீர்திருத்தம் செய்தார் என்று கூறினோம் அல்லவா? அந்தக் கோப்புகள் நிருவாகத்தைக் கேட்டால் மெய் சிலிர்த்துப் போவீர்கள். இதோ அந்த கோப்புகளது நிருவாக முறைகள்:

ஃபைல்கள்
அதிசயங்கள்!

ஏறக் குறைய ஓர் இலட்சம் கோப்புகள் திரு. நாயுடு பார்வைக்கு அவ்வப்போது வந்து வந்து போகும். அப்படிப்பட்டக் கோப்புகளின் பெயர்களில் சில இவை :

“நட்பு, காவல்துறை; திறமைகளுக்குப் பாராட்டு, மரியாதை வழங்கும் வழி முறைகள், யார் யார் முகஸ்துதியாளர்கள், உண்மைகள் எவையெவை? எருமைகளை எவ்வாறு திருத்துவது?