பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


How to set the Buffaloes in line, ஒருவரை எப்படி வேலை வாங்குவது? How to extract work from one, என்னுடைய தவறுகள், My Blunders, எனது முகமதுபின் துக்ளக், My Mohammed Bin Tughlak போன்ற பல சுயவிமரிசினக் கோப்புகளும் உள்ளன. இதில் எனது முகமதுபின் துக்ளக் கோப்பில், ஏராளமான கடிதங்களும், எழுத்துச் சான்றுகளும், உண்மைகளும் உள்ளதை நாம் உணரலாம்.

பண்பெனபடுவது
பாடறிந்து ஒழுகலல்லவா?

திரு. ஜி.டி. நாயுடு, இவ்வாறெலாம் சிந்தித்துச் சிந்தித்து, செயலாற்றி, தனது தவறுகளையும் உணர்ந்து, மீண்டும் அவை நிகழாதவாறு தன்னையே தான் உணர்ந்து, தொழிலாளர் நலம் பேணி, அவர்களிடம் குறை கண்டபோது அன்பாகத் திருத்தி, நிறை உணர்ந்தபோது பண்போடு பாராட்டி, பரிசளித்து, கட்டுப்பாட்டோடு கடமையாற்றும் கண்ணியத்தைக் கற்பித்து, பயணிகள் குறைகளை நீக்கி, எல்லாவித வசதிகளையும் அவர்களுக்குச் செய்து கொடுத்து, பணத்திற்கே மரியாதை தராமல், பண்பாடுகளுக்கே மரியாதை கொடுத்து, எந்த விதமான துன்பங்களுக்கும் - இடையூறுகளுக்கும் கலங்காமல், துணிவே துணையென நம்பி, எல்லாவற்றுக்கும் மேலாக, முயற்சியே உயர்ச்சி தரும் என்ற நெறிக்குப் பணிந்து நடந்து கொண்ட நல்லவராகவும், வல்லவராகவும் விளங்கும் சுபாவம் உடையவராக திரு. நாயுடு திகழ்ந்து வந்ததால்தான். தோன்றிய அவரது எல்லாத் தொழிற் துறைகளிலும் செல்வாக்கும், சொல் வாக்கும், புகழும் பெற முடிந்தது என்பது, நம்மில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பண்பாடுகளாகும். பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் அல்லவா?

இந்த அருமையான திறமைகளை அவர் பெற்றிருந்ததால் தான், ஜி.டி. நாயுடு என்று உலகத்தவர்களால் அழைக்கப்படும் அவர் செயற்கரிய செயல் வீரராக விளங்கினார்.