பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

57



"அந்த அபாயமான நேரத்தில் நான் கண்ட காட்சிகளும், அனுபவித்த மெய் சிலிர்ப்புகளும் ஏராளம் ஏராளம்:

உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்கள் இடையே, அந்த ஆபத்தான நேரத்திலும் உடன் பிறப்புகளைப் போல சதை யாடியாடி உயிர் தப்பிக்கத் தக்கச் செயல்களைச் செய்வதிலே அக்கறை உணர்ச்சிகளோடு போராடினார்கள்.

அடிமை புத்தி அப்போது எழவில்லை; சுதந்திர தேசிய விடுதலை உணர்ச்சிதான் எழுந்தது. மனிதனை மனிதன் வெறுக்கும் சாதிச் சழக்குகள் அப்போது தலைகாட்ட வில்லை.

ஒருவரை ஒருவர் காப்பாற்றும் மனித நேய அபிமானத்தைத் தான் நான் அவர்களிடம் கண்டேன்” என்று தனது நண்பர் ஒருவருக்கு வரைந்த கடிதத்தில் நாயுடு அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

உயிர் காக்கும் படகுகள் மூலமாக உயிர் பிழைத்தவர்கள் அனைவரையும், இரசியக் கப்பல் மீட்டு, டிஜிபவ்ட்டி என்ற ஓரிடத்தில் இறக்கி விட்டது. ஜி.டி.நாயுடு அந்த இடத்திலே இருந்து தனது உலகச் சுற்றுப் பயணத்தை துவக்க ஆரம்பித்தார்.

செர்மனியில் நாயுடு :
குன்கை சந்தித்தார்!

திரு. ஜி.டி. நாயுடு மார்சேல்ஸ் என்ற நகருக்கு முதலில் வருகை தந்தார். அதற்குப் பிறகு ஹானோவர் என்ற நகருக்குச் சென்ற நாயுடு அவர்கள், தனது நண்பர் குன்சைச் சந்தித்தார். அந்தத் தம்பதியர்கள் விருந்தினராக சில நாட்கள் அங்கே அவர் தங்கினார்.

குன்ஸ் தம்பதியர்கள் நாயுடு அவர்களைக் கண்டதும்; அவரை எப்படியாவது சில மாதங்கள் ஹனோவர் நகரிலே தங்க வைத்து, அங்கே உள்ள விஞ்ஞான வித்தகங்களுக்கு அழைத்துச் சென்று காட்டிட முயன்றார்கள். அதற்காகவே குன்சும் அங்கே சில நாட்கள் தங்கியதற்குக் காரணமும் ஆகும்.

செர்மனியில் புகழ்பெற்றக் கொலோன், பான் போன்ற சில முக்கியமான நகரங்களுக்குச் சென்று நகரத்தைச் சுற்றிப் பார்த்ததோடு இராமல், அந்த நகரங்களிலே இருந்த விஞ்ஞானக்