பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


கலைக் கூடங்களையும் நாயுடு கண்டார். அவற்றின் விவரங்களை அங்கே ஆய்வு செய்துக் கொண்டிருந்த அறிவியல் நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஹெயில்ப்ரோன் என்ற ஒரு நகரத்திற்குச் சென்ற ஜி.டி. நாயுடு அவர்கள். தான் புதிதாகக் கண்டுபிடித்து வைத்திருந்த ரேசண்ட் பிளேடைப் Rasant Blade, பரிசோதித்து, தனது கண்டுபிடிப்பு முறை சரியா என்று தெரிந்து கொண்டார் அவர்.

அதற்குப் பிறகு, செர்மன் நாட்டிலுள்ள பல முக்கியமான தொழில் நகரங்களுக்கும், அலுவலகங்களுக்கும் ஜி.டி. நாயுடு சென்று தனது மன எழுச்சிக்கான விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவுப் படுத்திக் கொண்டார்.

செர்மன் நாட்டின் தொழில் நகரங்களும், அறிவியல் ஆய்வுக் கூடங்களும் ஜி.டி. நாயுடு உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன.

சுருக்கமாகக் கூறுவதானால் ஜி.டி. நாயுடு கண்டுபிடித்த பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம், ஆர்வத்தையும் சோதனை உணர்ச்சிகளையும் ஊட்டிய நாடு செர்மன்தான் என்றால் மிகையன்று!

செர்மன் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஹனோவர் நகர் வந்து குன்ஸ் தம்பதியர்களிடம் விடை பெற்றுக் கொண்ட திரு. ஜி.டி. நாயுடு, பின்னர், பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று, அந்தந்த நாடுகளில் உள்ள புகழ் பெற்ற தொழில் நகரங்களையும், அறிவியல் சோதனைக் கூடங்களின் நிறுவனங்களையும், விஞ்ஞான வித்தகர்கள் பணியாற்றிடும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கும் சென்றார்! அங்கே நடைபெறும் புதுமைகள் என்னென்ன என்பதையும், அதன் விவரங்களையும் கேட்டுப் புரிந்து கொண்டார் திரு. நாயுடு.

யார் யார், எங்கெங்கே பொறியியல் நிபுணர்களாக, வணிக வேந்தர்களாக, தொழில்நுட்ப மேதைகளாக உள்ளனரோ அவர்கள் பட்டியல்களை ஜி.டி. நாயுடு தயாரித்தார்.

அவர்களது வீடு தேடிச் சென்றும், கண்டும், அறிவியல் நுட்பங்களிலே தெளிவு பெற்றார். தனக்குரிய சில கண்டுபிடிப்பு