பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

59


களின் வழிகளைக் கேட்டு, அதற்கான ஆதாரங்களையும், மூலப் பொருட்கள் தயாராகும் தொழிலகங்களையும் அவர் அறிந்தார்.

சென்ற நாடெலாம் :
பத்திரிக்கைகள் பேட்டி!

ஒவ்வொரு நாட்டையும், அதன் புகழ் மிக்க தொழில் நகரங்களையும் பார்வையிட்ட பின்னர், அந்த நகரங்களிலே உள்ள பத்திரிக்கை நிருபர்களையும் அழைத்துப் பேட்டி அளித்து இந்தியாவின் பெருமைகளையும், தமிழ்நாட்டின் சிறப்புக்களையும், தனது சுற்றுப் பயணத்தில் கண்டறிந்த வாணிக, விஞ்ஞான விவரங்களையும் விளக்கினார்.

இவ்வாறு திரு. நாயுடு ஒவ்வொரு புகழ்வாய்ந்த நகரங்களிலே நிருபர்களுக்கு அளிக்கும் பேட்டியால், மேல் நாட்டினர்க்கு நமது நாட்டின்மீது நல்லெண்ணம் ஏற்படவும், நம் நாட்டினர், மேல் நாட்டில் அவ்வப்போது கண்டுபிடிக்கும் புதுமை விஞ்ஞான அற்புதக் கருவிகளது விவரங்களை விளங்கிக் கொள்ளவும்; வழி அமைத்துக் கொடுப்பதைப் போன்ற ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் திறன் பெற்றதாக அமைந்தது எனலாம்.

திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் இங்லீஷ் மொழியைப் பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் முறையாகப் படித்தறியாதவர். ஏன், அவற்றின் படிக்கட்டுகளைக் கூட ஏறி இறங்கி அறியாதவர் அல்லரா?

உலக நாடுகளைச் :
சுற்றி வந்தார்!
.

ஆனால், இங்லிஷ் மொழியிலே போதிய புலமை பெறாதவராக இருந்தாலும், மற்றவர்களிடம் பேசுவதற்கும், பேசுபவர்களது கருத்தைப் புரிந்துக் கொள்வதற்கும் உரிய பயிற்சிகளைத் தனிப்பட்ட முயற்சிகளால் பெற்றிருந்தவர் ஆவார்.

எனவே, அவருடைய மேல் நாட்டுச் சுற்றுப் பயணங்களால், அவருக்கும், அந்தந்த நாட்டவர்க்கும் இடையே மொழிச் சிக்கல் ஏற்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க மொழி அனுபவமாகும்.