பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


ஆட்சி அரியணை ஏறியது. ஏறக்குறைய ஓரிரு ஆண்டுக் காலம்தான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக அண்ணா ஆட்சி செய்தார். 1989-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் அவர் புற்றுநோய் புழுக்களுக்கு இரையானார்!

அந்த மரணத்தை நேரில் கானத் தமிழ்நாட்டின் மக்களில் ஏறக்குறைய ஐம்பது இலட்சம் மக்கள் திரண்டு வந்து சென்னை நகரில் கூடி விட்டார்கள்.

அறிஞர் அண்ணா
மரண ஊர்வலம்!

கன்னியாகுமரி முதல் சென்னை நகர் வரை, வட வேங்கடம் முதல் தூத்துக்குடி கடல் முனை வரை - இருந்த தமிழர்கள் வீடுகளில், வீதிகளில், சந்துமுனை சந்திப்புகளில், மூடப்பட்ட கடைகளின் வாயிற்படிகளில், ஒவ்வொரு வீடுகளில், அறிஞர் அண்ணா திருவுருவப் படங்களை வைத்து, மலர் மாலைகள் சூட்டி, தேங்காய் உடைத்து, கற்பூர ஜோதியைக் காட்டி, அவர் திரு உருவம் முன்பு கும்பல் கும்பலாக மக்கள் கூடிக் கண்ணீர் சிந்தி, இரவும் - பகலும் உண்ணாமல், உறங்காமல் விழித்திருந்து, வீதிகள் தோறும் அண்ணா மரணத்தைச் சுண்ணாம்பு கட்டிகளால் எழுதி எழுதிக் கண்ணி சிந்தியபடியே இருந்தார்கள் மக்கள்.

ஒவ்வொரு பேருந்துகளும், லாரிகளும், கார்களும், இரயில் வண்டிகளும் அண்ணா மரணத்தைக் காண வந்த மக்கள் கூட்டங்களை ஏற்றிக் கொண்டு நிரம்பி வழிந்தபடியே சென்னை வந்து சேர்ந்தனர். நேரம் ஆக ஆக லட்சம் லட்சமாக மக்கள் திரண்டனர்.

சென்னை நகர் கடைகள் அடைக்கப்பட்டதால், பல லட்சக் கணக்காகக் கூடிய மக்கள் தண்ணி அருந்தக் கூட கடைகள் இல்லை. தாகத்தால் தவித்த பெண்கள், குழந்தைகள் இலட்சக் கணக்கானோர் அங்கே பசியால் பரிதவித்தார்கள். இந்த மக்கட் கடல், பொங்கிய ஊழி போல, தெருத் தெருவாகப் பெருக்கெடுத்த வெள்ளம்போல நகர்வதைக் கண்ட தமிழ்நாடு அரசு, வானொலியிலே தேநீர் கடைக்காரர்களே, உணவு விடுதி வைத்திருப்போர்களே கடைகளைத் திறந்து, வந்துள்ள மக்களுக்கு வேண்டிய உணவு