பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



பண்டித நேருவையும் அப்போது புகைப்படம் எடுத்துக் கொண்டு, அந்தப் படத்தில் அவரது கையெழுத்தையும் பெற்றார். கமலா நேருவிடமும், பண்டித ஜவகர்லால் நேருவிடமும் விடைபெற்றுக் கொண்ட திரு. நாயுடு, நேராக அங்கே இருந்து அமெரிக்க நாட்டுக்குப் புறப்பட்டு வந்தார்.

அமெரிக்கா நாடு அப்போது செல்வச் செழிப்பான நாடாக மாறி வந்தது. அங்கே சென்ற திரு. நாயுடு, சில கனரகத் தொழிற் சாலைகளைச் சென்று பார்வையிட்டு, அங்கே என்ன தொழில் நடக்கின்றதோ, அதன் உண்மைகளை நாயுடு விசாரித்து அறிந்து கொண்டார்.

அமெரிக்காவில் அறிந்த :
தொழில் நுட்பங்கள்!

அமெரிக்காவின் அரசியல் முறை, கல்வி அமைப்புகள், போக்கு வரத்து, நிர்வாக அமைப்புகளது புதிய வசதிகள், வளர்ந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முன்னேற்றங்கள், மக்கள் வாழ்க்கை வசதிகள், புதுமையாக வெளிவந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாடுகள் ஆகியவற்றை எல்லாம் நாயுடு ஆழமாக விசாரித்துப் புரிந்து கொண்டார்.

திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், இரண்டாவது முறையாக உலகம் சுற்றிய அதிசய மனிதராக விளங்கினார். அமெரிக்காவை விட்டுப் புறப்பட்ட அவர், வரும் வழியில், சீன நாட்டையும், சப்பான் போன்ற நாடுகளிலே சில நாட்கள் தங்கினார். அங்கங்கு வளர்ந்துள்ள தொழிலியல் முன்னேற்றங்களையும், அறிவியல் வளர்ச்சிக் கண்டு பிடிப்புகளின் வரலாறுகளையும், அவற்றின் நுட்பங்களையும், இயக்கங்களையும் கண்டறிந்து கொண்டார்.

ஜப்பான், சைனா :
வளர்ச்சிகளில் வியப்பு!

உலகப் புகழ் பெற்ற அதிசயங்களில் ஒன்றான சீன நாட்டின் Great Wall என்ற மதிற் சுவரைக் கண்டு, அதன், அக் காலத் தொழில்