பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. ரேசண்ட் பிளோடை கண்டுபிடித்தார்
அமெரிக்க -பிரிட்டன் வணிகப் போட்டி!

வேதியல் விஞ்ஞானி, உயிரியல் விஞ்ஞானி, பொறியியல் விஞ்ஞானி, இறையியல் விஞ்ஞானி, வாழ்வியல் விஞ்ஞானி மொழியியல் விஞ்ஞானி, அகிம்சையியல் விஞ்ஞானி, அரசியல் விஞ்ஞானி, தத்துவவியல் விஞ்ஞானி, அனுவியல் விஞ்ஞானி, பொருளில் விஞ்ஞானி, பேர்க்கலை விஞ்ஞானி, கொடையியல் விஞ்ஞானிகள் போன்ற பலர் உலகத்தில் தோன்றி, மனித குலத்துக்குரிய மகத்தான புரட்சிகளை, ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு காலங்களில் அந்தந்த நாட்டில் அறிவுப் புரட்சிகளைச் செய்திருக்கிறார்கள்! உலக வரலாறு புரிந்தவர்கள் இந்த உண்மைகளை உணர்வார்கள்.

விந்தைகள் செய்த
விஞ்ஞானிகள் பலர்!

இத்தகைய விஞ்ஞானத் துறைகளில் குறிப்பிடத் தக்க வித்தகர்கள் : ஜெகதீச சந்திரபோஸ், சர்.சி.வி. இராமன், பா.வே.யாளிக்க நாயகர், வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள், திருவள்ளுருவர் பெருமான், தொல்காப்பியர், காந்தியடிகள், ஆப்ரகாம் லிங்கன், சாக்ரடீஸ், ஐன்ஸ்டின், மேடம் கியூரி, காரல்மார்க்ஸ், சாக்கியன், மாவீரன் நெப்போலியன், பாரி வள்ளல், டாஸ்கர சேதுபதி போன்ற மேலும் பலரை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

ஆனால், தொழிலியல் துறையில் ரூத்தர் ஃபோர்டு, டாடா போன்றவர்கள் தோன்றி வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு தொழிலியல் விஞ்ஞானியாகத் தோன்றி உலக அளவில் புரட்சி செய்த ஒருவர் உண்டென்றால், அவர்