பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

83



இதிலும் நாயுடுவே இலண்டன் வியாபாரிகளைத் தோற்கடித்து விட்டார். விலையைக் குறைத்து விற்றிட்ட புதிய நிறுவனமும் நாளடைவில் மூடப்பட்டு விட்டது.

இலண்டனில் தனது பிளேடுகளுக்கு நல்ல விற்பனைக் கிராக்கியை உருவாக்கிய ஜி.டி. நாயுடு அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவிலும் நாயுடு
பிளேடு பரபரப்பு விற்பனை!

நாயுடு அவர்கள், அமெரிக்கா போவதற்கு முன்பாகவே, அவரது பிளேடுகள் அமெரிக்கர்களிடம் நல்ல செல்வாக்கோடு விற்பனையாகிக் கொண்டிருந்ததால், அமெரிக்கா சென்ற நாயுடுவை அங்கிருந்த பெரிய நிறுவனங்கள் சில அவரைப் பாராட்டிப் பெருமைப்படுத்தின.

அமெரிக்க வணிகர்கள் ஜி.டி. நாயுடுவின் விஞ்ஞான விந்தையைப் பாராட்டியதோடு நில்லாமல், உலகம் புகழும் ரேசண்ட் பிளேடு விற்பனை உரிமையைத் தங்களுக்கு வழங்க வேண்டு மென்று கேட்டார்கள்.

அமெரிக்க வியாபார நிறுவனங்கள் எப்படியாவது ரேசண்ட் பிளேடு விற்பனை உரிமையைப் பெற்றுவிடுவது என்று, ஒன்றுக் கொன்று போட்டியிட்டு நாயுடுவை அணுகின.

ரேசண்ட் பிளேடு
உரிமைப் போட்டி!

அந்த நிறுவனங்களில் பெரிய நிறுவனம் ஒன்று விக்டர் என்ற அமெரிக்க வியாபார நிறுவனம். அதன் முதலாளியான விக்டர் என்பவர், ஜி.டி. நாயுடு தனது நிறுவனத்தில் பணி செய்ய விருப்பப்பட்டால், அவருக்கு மாதம் 3000 டாலர், அதாவது இந்திய நாணய மதிப்பின்படி 15,000 ரூபாய் மாதச் சம்பளம் தருகிறேன்; வேலைக்கும் வைத்துக் கொள்கிறேன் என்ற வாக்குறுதியை வழங்கி, பணியில் சேருமாறு நாயுடுவைப் பார்த்துக் கேட்டார். அதை திரு. ஜி.டி. நாயுடு மறுத்து விட்டார்.

தமிழ் நாட்டில் யு.எம்.எஸ். என்ற மோட்டார் கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கி, 200 பேருந்துகளுக்கு மேல் நடத்துபவர்