பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


ஜி.டி. நாயுடு. ஆயிரக் கணக்கானத் தொழிலாளர்கள் அவரது அதிகாரத்தில் பணி புரிகிறார்கள்.

உடல் நலமற்ற ஒரு தொழிலாளி பணிக்கு வந்து வேலை செய்தால், ஒரு நாளைக்கு அவனுக்குப் பத்து ரூபாய் அபராதம் என்று கட்டளையிட்டு, தொழிலாளர் நலம் பேணி வரும் ஓர் அதிசய முதலாளியான ஜி.டி.நாயுடுவை, அமெரிக்க முதலாளியான விக்டர் என்பவர் பணியில் சேர ஆசை காட்டினால் சேருவாரா ஜி.டி. நாயுடு?

அதனால், அந்த அமெரிக்க முதலாளியின் அன்பான வாக்குறுதி அழைப்பை ஏற்க நாயுடு மறுத்து விட்டார். இதைக் கண்ட அமெரிக்க வணிக அதிபர் விக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

பிளேடு உரிமை பெற
ரு. 15 லட்சம் பெற மறுப்பு!

இதற்கடுத்து, மற்றொரு அமெரிக்க முதலாளி ஜி.டி.நாயுடு விடம் பேசும்போது, ரேசண்ட் பிளேடு உரிமையைத் தனது நிறுவனத்துக்கு உரிமையாக்கினால், "மூன்று லட்சம் டாலர் அதாவது, 15 இலட்சம் ரூபாயை விலையாகக் கொடுக்கத் தயார்" என்று கேட்டுக் கொண்டார். அதையும் திரு. ஜி.டி. நாயுடு ஏற்க மறுத்து விட்டார்.

வேறொரு அமெரிக்க முதலாளி, ஜி.டி. நாயுடுவிடம் உரையாடியபோது, "எனது சொந்த ஊரான சிகாகோ என்ற நகரத்தில், உமது ரேசண்ட் பிளேடு தொழிற்சாலையை உருவாக்குகிறேன். அங்கே ரேசண்ட் பிளேடுகளைத் தயாரிப்போம். விற்பனையில் கிடைக்கும் மொத்த லாபத் தொகையில் பாதி அளவை, அதாவது 50 சதவிகிதத்தை உமக்குப் பணமாகக் கொடுக்கின்றேன்" என்று தெரிவித்தார். அதையும் ஜி.டி. நாயுடு அவர்கள் சிரித்துக் கொண்டே மறுத்து விட்டார்.

இவ்வாறு அமெரிக்க முதலாளிகள் ஒவ்வொருவராகப் போட்டிப் போட்டுக் கொண்டு வலைவீசி, ஆசை காட்டி, ஜி.டி. நாயுடுவை பணிய வைக்க முயன்றார்கள். பிளேடின் உரிமையை விலைக்கு வாங்கப் போட்டிப் போட்டார்கள் என்றால், அந்த