பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


இந்தியன் ஒருவனால், தமிழன் ஒருவனால் கண்டுபிடிக்கப் பட்ட அந்த ரேசண்ட் பிளேடு உற்பத்தி வாணிகத்தில் கிடைக்கும் லாபத் தொகை எல்லாம். இந்திய மண்ணுக்கே, தமிழ் பூமிக்கே பயன்பட்டாக வேண்டும் என்பதே அவரது தணியாத ஆசையாக நெஞ்சிலே படர்ந்திருந்தது.

அந்த தணியாத வேட்கையை நிறைவேற்றிட ஜி.டி. நாயுடு அவர்கள் பலமுறைகளில், பல வழிகளில் முயன்று பார்க்க, இரவும் - பகலும் முயற்சி செய்து வந்தார்.

நாயுடு ‘ரேசண்ட்’ பிளேடு
இந்தியாவில் தோன்றாதது ஏன்?

ஜி.டி. நாயுடுவின் இந்த நினைத்தற்கு அரிய நிகழ்ச்சிக்கு, அப்போது சென்னை மாநில ஆட்சியின் செயலாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த எம்.ஏ.சீனிவாசன், எஸ்.வி.இராமமூர்த்தி என்பவர்கள் - அதற்கான பணிகளில் உதவி செய்திட முன் வந்தார்கள்.

ஆனால், தில்லியிலே உள்ள அரசு அவர்களுக்கு உதவிட முன்வராமல் இருந்துவிட்டது ஒரு காரணம். என்றாலும், நார்வே நாட்டில் கிடைத்திட்ட உயர் ரகம் இரும்பு இந்தியாவில் கிடைக்காததும் - மறு காரணமாக அமைந்தது.

அதனால், இன்று வரை ரேசண்ட் பிளேடு தயாரிப்பகம் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் அமைக்கப்படாமலே போய் விட்டது. இனியாவது ரேசண்ட் பிளேடு தொழிற்சாலை தோன்றுமா இந்திய மண்ணில்?