பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

95


பார்த்துப் பார்த்து. நுணுகி நுணுகி ஆராய்ந்து பார்ப்பேன். அதற்கான நேரமும் இருந்தது எனக்கு என்றும் தனது மற்றொரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க சாலைகளில்
Level Cross-கள் இல்லை!

அமெரிக்க மக்கள் பழகும் பண்பும், பழக்க வழக்கங்களும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை வேறொரு நண்பருக்கு எழுதிய அஞ்சலில் கூறும்போது, "அமெரிக்கர்கள் அறிவிற் சிறந்தவர்கள். புகை வண்டி புறப்படும் நேரமும் - அது வந்து சேரும் நேரமும் எல்லார்க்கும் தெரிந்திருக்கின்றன. ஆதலால், இங்கே சாலைகளும், இருப்புப் பாதைகளும் சந்திக்கும் இடங்களில் போக்கு வரவைத் தடுக்கும் கதவுகள், Level Cross இல்லை. அமெரிக்கப் புகை வண்டிகளில் ஆயிரம் கல் தொலைவுகள் பயணம் செய்தாலும், ஆடைகளில் அழுக்கு ஒட்டுவதில்லை. அமெரிக்காவில் ஓடும் இரயில் வண்டிகள் மிகவும் அழகாகவும், தூய்மையாகவும் இருக்கின்றன” என்ற ஜி.டி. நாயுடு அவர்கள் கூறுகிறார்கள்.

நாற்பத்தேழாவது வயதிலும்
மாணவராகக் கற்றார்!

நியூயார்க் நகரில் நடைபெற்ற உலகக் கண்காட்சி, பொருட் காட்சி நடந்து முடிந்த பின்பு, மேலும் சில தொழிற்சாலைகளை அந்த நகரிலே சென்று ஜி.டி.நாயுடு பார்வையிட்டார். பிறகு அங்கிருந்து சிகாகோ நகர் சென்றார். அங்கும் சில அறிவியல் பயிற்சிக் கூடங் களைப் பார்வையிட்ட பின்னர், செயிண்ட் லூயி என்ற நகரத்திற்குச் சென்று நாயுடு தங்கினார்.

அந்த நகரில் தொழிலியல் சாலைகள் மட்டுமல்ல, தொழில் பயிற்சிப் பள்ளிகளும் இருப்பதை அறிந்ததால், அங்கே நிரந்தரமாக சில மாதங்கள் தங்கிட ஜி.டி. நாயுடு தக்க இட வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டார்.

செயிண்ட் லூயி என்ற நகரில், கார்ட்டர் கார்புரேட்டர் பள்ளி, Carter Carburator School என்ற ஒரு புகழ்பெற்ற கைத் தொழில் பயிற்சிப் பள்ளி இருந்தது. அதை அவர் பார்வையிட்டார்.