________________
சொல்லை எந்தச் சூழலில் பயன்படுத்துகிறீர்களோ, அந்தச் சூழலில் அதற்குப் பொருள் வேறுபடும். 'இந்தக் கடிதத்தை இரண்டு படிகள் எடு' என்று சொன்னால், 'இரண்டு படி அரிசி அளந்து போடு' என்று சொன்னால், 'ஒழுங்காகப் படி' என்று சொன்னால், படி என்ற ப்+அ+ட்+இ என்ற நான்கு ஒலிகளையும் சேர்த்துச் சூழலுக்குத் தகுந்தாற்போல அனுபவத்திற்குத் தகுந்தாற்போல பொருள் வேறுபாட்டை விரித்துக்கொண்டே வருகிறோம். தாய்மொழியைத் தன்னுணர்ச்சியோடு நாம் பயன்படுத்துவது இல்லை. அந்தத் தன்னுணர்ச்சியைப் பெற்றால் மொழி அறிவு வரும். சொல்லுக்கான பொருள் மாறிக்கொண்டே வருவதற்கு ஓர் உதாரணம் சொல்லட்டுமா? கறி என்ற சொல் இன்றைக்குப் பொதுவாக இறைச்சியைக் குறிக்கின்ற ஒரு சொல்-ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி என்பதாக. ஆனால் கறி என்ற சொல்லுக்கு முதற் பொருள் மிளகு என்பதாகும். பிறகு மிளகை உரித்து வெள்ளை மிளகு செய்தபோது இதைக் கருங்கறி என்று சொன்னார்கள். அன்று உறைப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள் மிளகு என்பதனாலேயே கறியிட்டுச் செய்கின்ற பொருட்களெல்லாம் கறி என்று ஆகி வந்தன. பிறகு, குழம்புக்குக் கறி எனப் பெயர் வந்தது."உங்க வீட்டுல இன்னிக்கு என்ன கறி?" என்று கேட்டால் "என்ன காயிட்டுக் குழம்பு?" என்று பொருள். பிறகு காயோடு சேர்த்துக் கறியும் இட்டுச் சமைப்பதினாலே அல்லது கறியோடு இட்டுக் காயையும் சமைப்பதினாலே அதற்குக் காய்கறி என்று பெயர் வந்தது. பிறகு துணையாக வைத்துக் கொள்ளக்கூடிய கூட்டுக்களையெல்லாம் தொடுகறி என்று முன்னடையிட்டுச் சொன்னார்கள். நீங்கள் மறந்துவிடக் கூடாது. இந்தக் காய்கறியிலே கீரை அடங்காது. ரசம் சேராது. எது காய்கறி என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. எங்கே காய் இருக்கிறதோ அதற்குத்தான் காய்கறி என்று பெயர். பிறகு மிளகிட்டுச் செய்யக்கூடிய அதிக உறைப்பு தேவைப்படுகிற புலால் உணவுக்குக் கறி என்ற பெயர் வருகிறது. அப்புறம் புலால் துண்டுகளுக்கே கறி என்ற பெயர் வருகிறது. காரணம் உறைப்புக்கு வேறு சொல் கிடைத்துவிட்டதுதான். உறைப்பிற்கான இன்னொரு தாவரம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே வெளிநாடுகளிலிருந்து அறிமுகமாகிறது. அது மிளகு போல் இருந்ததனாலே, அதைக் காயவைத்து வற்றலாக்கித்தான் பயன்படுத்த முடியும் என்பதால், அதற்கு மிளகாய் வற்றல் என்றும் மிளகாய் என்றும் பெயரிட்டார்கள். அதை மிளகினுடைய மாற்று வடிவமாகக் கொண்டார்கள். அதற்கு மிளகாய் என்றும் மிளகாய் வற்றல் A. 154 2 தொ. பரமசிவன்