பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்99


வாருங்கள். இங்கே போனால் என்ன என்று அவ்வப் போது அவரை சீண்டினார்கள்.

அவர் வீட்டுத் திண்ணையில் "வட்டச் சம்மணம் போட்டு" பிள்ளையார் மாதிரி உட்கார்ந்தபடி அலடசிய மாகச் சிரிப்பார். வாயில் அடக்கி வைத்திருக்கும் வெற்றிலை எச்சிலை சளப்பென்று துப்பிவிட்டு, 'அஹஹ, போறவங்க எங்கே வேணும்னாலும் போய்ப் பாருங்களேன். எனக்கு எந்த இடத்தையும் பார்த்து ஆக வேண்டியது எதுவுமில்லை' என்பார்.

'ஐயா சொக்கு, நீ எங்கே போனாலும் போகா விட்டாலும், மதுரையை போய் பார்த்திட்டு வந்திரு. மதுரை எப்படியாப்பட்ட ஊரு மதுரை பாராதவன் கழுதையின்னே பெரியவங்க சொல்வி வச்சிருக்காங்க” என்று மீனாச்சி ஆச்சி அவரிடம் அடிக்கடி சொல்வது உண்டு.

"ஆச்சி, மதுரை பெரிய ஊரா, அழகான ஊரா இருக்கலாம். ஆனா அதைவிடப் பெரிய ஊருக இல்லைன்னு சொல்லமுடியாது, அப்படி இருக்கையிலே, மதுரையைப் பார்த்தால் தான் சன்ம சபால்யம் அடையும்கிற மாதிரிப் பேசுவது சரியில்லை. அதனாலே மதுரை பாராதவன் கழுதை ன்பதும் சரியான பேச்சு இல்லை" என்று சொக்கய்யா சொல்வார்.

அத்துடன் பேச்சை விட்டுவிட மாட்டார். "நம்ம வங்களே கருத்துள்ள பல வசனங்களையும் சொல்லடைவுகளையும் அர்த்தம் இல்லாததா ஆக்கிப் போட்டாங்க, அறப்படிச்ச மூஞ்சூறு காடிப் பானையிலே விழும். இப்படி ஒரு பழமொழி சொல்லுவாங்க. மூஞ்சூறுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஆறப் பிடிச்ச முன் சோறு காடிப்பானையில் விழுகிறதுதான் சரியான வசனம் சோறு வடிக்கையிலே இறுகப் பிடிக்கிறபோது முதல் பருக்கை எப்படியும் கஞ்சித்