பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 101

மருதூரையும் பெருசாச் சொல்லுறியே!’ என்று பரிகசித்தார்.

“ஒருத்தன் எல்லாவற்றையுமே பார்த்துவிட முடியாது. மேலும் புதுசு புதுசாக் கண்டு மனசை விசாலப்படுத்துறதுக்கு ஊர் ஊரா ஓடிக்கிட்டே இருக்கனும்கிறதையும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான், உருண்டு உருண்டு கொண்டே இருக்கிற கல்லில் பாசி ஒட்டாது. வெளியூர் எங்கும் போகாமலே, இங்கே உட்கார்ந்து எதிரே இருக்கிற குப்பைத் தொட்டியையும், அங்கே வந்து காலைக் கிளப்பி ஈரப்படுத்திவிட்டு ஓடுகிற நாயையும் பார்த்துக்கிட்டே நான் எத்தனையோ விஷயங்களை உணர முடிகிறது. மேலத் தெருவிலிருந்து கீழத் தெருவுக்கு மெதுவாக நடந்தாலே, ஒரு பிரயாண அனுபவங்களை என்னாலே பெறமுடியுது. பின்னே என்ன?” என்பார்.


“அகராதி புடிச்ச அண்ணாவி?” ‘தலைக்கணம்’ ‘ஹெட் வெயிட்!’ என்று மற்றவர்கள் சொக்கய்யாவைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். ‘கிணற்றுத் தவளை’ என்றும் சொல்வார்கள்.


பொதுவாகவே, சிவபுரத்தார்கள் ஊர் சுற்றுவதில் அவா உடைய உல்லாசப் பிரியர்களாக வளர்ந்ததில்லை. ரொம்பகாலம் வரை ‘மணியாச்சிக்கு வடக்கே’ திக்கு திசை தெரியாதவர்களே அவ்வூரில் அதிகமாக இருந்தார்கள், அப்புறம் மதுரை வரை போய் வந்த பெருமை. பெற்றோர்கள் அநேக புள்ளிகள். இளந்தலைமுறையினரில் சிலர் சென்னைக்குப் போய் வந்த சிறப்பை அடைந்தார்கள்.

பஸ் போக்குவரத்து அதிகமாகவும் சர்வ சாதாரணமாகவும் ஆகியுள்ள தற்காலத்தில், ஊரில் இருப்பதை
தோ-7