பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்103


வர வேண்டாம். சிவபுரத்திலே இருக்கிறவங்களே என் கட்டையைத் தூக்கிட்டு ஆத்தங்கரைக்குக் கொண்டு போய் எரிச்சுப் போடுவாங்க. பின்னே என்ன!" என்பார்.

"இவரு கிட்டே யாரு பேசுவா?" என்று மற்றவர் களும் சும்மா இருந்துவிட்டார்கள்.

இப்பேர்ப்பட்ட 'கல்யாண குணங்கள்' உடைய சொக்கய்யா திடீரென்று நான் இப்படி மதுரை, திருச்சி, மதராஸ் எல்லாம் போய் வரப்போறேன்’ என்று அறிவித்தால் அது லேசுப்பட்ட விஷயமா என்ன? சிவபுரம் வீடு தோறும் பேச்சுக்கும் சர்ச்சைக்கும் இலக்காகும் பரபரப்புச் செய்தி இல்லையா!

"என்ன அண்ணாச்சி, வெளியூர் போகப் போகறீங்ளா? என்று விசாரித்த தம்பியா பிள்ளைகளும், 'தாத்தா மெட்ராஸ் பார்க்கப் போறேளா? எனக் கேட்ட பேரப் பிள்ளைகளும், 'மாமா டூர் கிளம்பியாச்சு போலிருக்கு?' என்று பேச்சுக் கொடுத்த மருகன்களும் மருமகள்களும், 'பெரியப்பா, என்னைக்குப் புறப்படுநீங்க?? சித்தப்பா, எங்க எல்லாம் போக எண்ணியிருக்கீங்க? என அக்கறையாக வினவிய மகன்களும் அவ்வூரில் நிறையவே இருந்தார்கள்". தங்கள்து பிரயாண அனுபவங்களையும், மேலான ஆலோசனைகளையும் எத்தனையோ பேர் அவரிடம் சொன்னார்கள்.

இதெல்லாம் சோக்கய்யாவுக்கு சந்தோஷத்தோடு எரிச்சலும் தந்தன. "சவத்துப் பயலுக, இருக்கிறவனை இருக்கவும் விடமாட்டாங்க, சாகிறவனை சாகவும் விட மாட்டாங்க. எவனும் எக்கேடும் கெடுதானுன்னு விட்டுப் போட்டு அவனவன் வேலையைப் பார்க்க லாமே, என்கிறதே இவனுகளுக்கு இல்லை பாருமேன்?" என்று அவர் முணமுணத்தார்.