பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106வல்லிக்கண்ணன்


வேண்டாமா? அப்புறம் ஆனந்தம் எங்கேயிருந்து கிட்டும்? பெரிய ஊருதான், நிம்மதியா, செளகரியமா, குளிக்க வசதி உண்டா? ஏதோ குளிக்கிறோம்னு பேர் பண்றதுக்காக, ஒரு வாளித் தண்ணியிலே உடம்பைக் கழுவிக்கிட்டு... சேச்சே, எனக்கு அது பிடிக்கவேயில்லே, என்னென்னமோ தட புடலாப் பேருகளை வச்சிருக்காங்க. எந்த ஒட்டலிலே போய் தின்னாலும், ரூபாய்தான் பறக்குதே தவிர, வயிறு முட்டச் சாப்பிட முடியலே. சாப்பிட்டோம்கிற திருப்தியும் ஏற்பட மாட்டேன் குது. நம்ம வீட்டிலே பழையச் சோறும், சுண்டல்கறியும் சாப்பிட்டால் ஏற்படுகிற குளுமையும் திருப்தியும் இந்த மூணு நாளிலே எந்தப் பெரிய ஓட்டலிலும் எனக்கு ஏற்படவே இல்லே. அதுதான் பார்த்தேன். நமக்கு, மதுரையும் சரிப்படாது, மதராசும் ஒத்துவராது; நம்ம இன ரு க் கே போயிட வேண்டியதுதான்னு உடனேயே ரயில் ஏறி விட்டேன். சே, என்ன கூட்டம், என்ன நெருக்கடி அர்த்தமில்லாத அவசரம் செச்சே, எனக்கு எதுவுமே பிடிக்கலே’ என்றார்.

சொக்கய்யா ஆற்றுக்குப் போய் சுகமாகத் தண்ணீரில் குளிரக் குளிர மூழ்கிக் களித்தார். "ஆ, இந்த சுகத்துக்கு எதுதான் ஈடாகும்? இப்படிக் குளிப்பதே சந்தோஷமா இருக்குதே!" என்று அந்த இன்பத்தில் லயித்துமிதந்தார். பிறகு அடிக்கடி தனது எண்ணங் களை ஒலிபரப்ப அவர் தயங்கவில்லை.

"ஆற்றுத் தண்ணீரில் ஆனந்தமாகக் குளிப்பது ஒரு சுகம். அமைதி திறைந்த சூழ்நிலையில்:அவசரம் எதுவும் இல்லாமல் தன் காசியங்களைச் செய்து கொண்டிருப்பதில் ஒரு சந்தோஷம், நிம்மதியாய் தூங்குவது ஒரு சுக அனுபவம். இதுமாதிரி, வாழ்க்கையிலே சந்தோஷங்களுக்குக் குறைச்சலே இல்லை. மனுசங்கதான் இதை உணர்ந்து அனுபவிக்கத் தவறிடுறாங்க."