பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்107


சிவபுரம் கிராமத்தில் உள்ளவர்களுக்குக் கூட அவர் பேச்சு பிடிக்கவில்லை. நாகரிக நகரவாசிகள் அவருடைய கருத்துக்களை ஒத்துக்கொள்வார்களா என்ன?

"சுத்தப் பைத்தியக்கார மனுஷன்! ஒவ்வொருத்தன் மெட்ராசுக்குப் போகனும் லிட்டியை சுத்திப் பார்க்கணும்னு தவியாய் தவிச்சுக் திட்டிருக்கான். அங்கேயே வசிக்கனும்னு எத்தனையோ பேரு பறவாப் பறக்கிறாங்க. இவரு என்ன டான்னா... ஹஹ" என்று சிரிப்பிலே பேச்சை முடிப்பது ஊரார்களது வழக்கமாயிற்று. மற்றவர்களின் நற்சான்று பெற வேண்டும் என்று சொக்கய்யா என்றுமே ஆசைப்பட்டவர் இல்லைதான்.


★ தீபம்-அக்டோபர்-1375