பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118வல்லிக்கண்ணன்


திருநகர் என்கிற சுமாரான அந்த டவுனில் ராஜப்பாவை தெரியாதவரே கிடையாது என்று உறுதியாகச் சொல்லலாம். திருநகரின் தேரோடும் திருவீதிகளில் இருமருங்கிலும் உள்ள வீடுகளில் வசித்தவர்களும், தெருவில் போய் வருகிற வேலை அல்லது பழக்கம் உடையவர்களும், ராஜப்பாவை ரொம்ப நன்றாக அறிவார்கள். பள்ளிக்கூடம், போகிறவர்களும், அலுவலகம் செல்கிறவர்களும், காலையிலும் மாலையிலும், தினசரி அவரைக் கண்டுகளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். அந்தியிலும், இரவிலும் சினிமா பார்ப்பதற்காக தியேட்டர்களின் முன்னே குழுமுகிற வழக்கத்தை உடைய நகர மைந்தரும் மகளிரும் ராஜப்பாவையும் கண்ணாறக் காண வேண்டிய ஒரு காட்சியாகக் கருதினார்கள்.

திருக்கோயிலின் திருவீதித் திருஉலா உற்சவமூர்த்திகள் தினத்துக்கு ஒரு அலங்காரமும், வேளைக்கு ஒரு கோலமும் பூண்டு, விதம் விதமான வாகனங்களின் மீது எழுத்தருளி, பக்தகோடிகளை மகிழ்விப்பது போலவே, ராஜப்பாவும் தினுசு தினுசாகத் தன்னை அலங்கரித்து கொண்டு தெருக்களில் உல்லாச பவனி வந்து திருநகர் மக்களை சந்தோஷப்படுத்தி வாழ்ந்தார்.

அவருக்கு வசதி நிறையவே இருந்தது. தாத்தா திரட்டி வைத்த சொத்து, அப்பா சம்பாத்தியம் பண்ணிச் சேர்த்த நிலபுலன்கள் ரொக்கம் எல்லாம் போக, அவரும் தலைமயிரை தியாகம் பண்ணி சொத்து சேகரிக்க இரண்டு மூன்று தடவைகள் வாய்ப்பு கிட்டியது.

அவருக்கு நெருங்கிய உறவினர் சிலருக்கு கொள்ளி வைக்க புத்திர பாக்கியம் இல்லாமல் போன காரணத்தி னாலே, ராஜப்பா கொள்ளி வைத்து மொட்டை போட்டுக் கொண்டார். பணத்தோடு பணமும், சொத்