பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124வல்லிக்கண்ணன்

 'ஹெஹ்ஹெஹ்ஹா!' என்று தனிப் பாணியில் சிரிப்பை உதிர்த்தார் ராஜப்பா. எனக்கு தொழில் அனுபவம் இல்லாமல் இருக்கலாம் அண்ணாச்சி. ஆனாலும் தினசரி வாழ்க்கையிலே நடிச்சு நடிச்சு... கண்ணாடி முன்னாலே நின்று மணிக்கணக்கிலே டிரெயினிங் எடுத்திருக்கேன். ரோடுகளிலே போகையிலே... அதெல்லாம் சொல்லுவானேன்? சான்சு கொடுத்துப் பாருங்க, அப்புறம் நீங்களே பிரமிச்சுப் போவீங்க நம்ம திறமைப் பார்த்து!’ என்றார்.

அண்ணாச்சி சொன்னார்: வேணாம்னா முதல் படத்திலே இப்படிச் செய்யலாம். கூட்டமா வர்ற காட்சிகளிலே கும்பலோடு கும்பலா நீங்களும் தலையைக் காட்டுங்க. ஒரு காட்சியலே ஹீரோவை வரவேற்கிற ஊர் பிரமுகர்களிலே ஒருத்தரா வாங்க. கோர்ட்டு சீனிலே சும்மா வந்து உட்கார்ந்திட்டுப் போகிற ஒரு நபராக- வக்கீலாகவோ யாராகவோ... இப்படி சில்லறை வேஷங்களிலே ஏதாவது தரலாம். நீங்க இவ்வளவு துரம் கேட்கறீங்களேன்னுதான் இது கூட....

சப்பென்று ஆகிவிட்டது ராஜப்பாவுக்கு, இப்படித் தான் 'சினிமா சான்ஸ்' கிடைக்கும் என்று அவர் கனவில் கூட எண்ணியதில்லை. சினிமாவில் நடிப்பது என்றால் ஒரு பீரோவாக - அட, அது கூட வேண்டாமய்யா! அதெல்லாம் ஸ்டார் நடிகர்களுக்கே நிரந்தரக் குத்தகை என்றே இருந்துவிட்டுப் போகட்டும்! அதுக்கு அடுத்த படி முக்கியமான ரோலில்- படத்தில் பெரும் பகுதி வந்து ஜமாய்க்கிறபடி - பலவிதமான திறமைகளையும் காட்டுகிற மாதிரியிலே- கதாநாயகனுக்கு நெருக்கடி சமயங்களில் துணைபுரிகிறவனாக, குதிரையில் ஜம்மென்று போய் வருவது, குத்துச் சண்டை, கத்தி வீச்சு இதுகளில் ஈடுபடுவது இப்படி, எத்தனையோ . வேலைத்தனங்கள் இல்லையா, அதை எல்லாம் செய்து