பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126வல்லிக்கண்ணன்

 பண்ணச் செய்ய வேண்டியதுதான்னு ஐடியா கொடுப்பீங்களோ அண்ணாச்சி? என்று 'புரட்டக்க்ஷன் மானேஜர் ஆகப் பணிபுரிந்த 'தம்பிச்சி' பேசினார்.

ராஜப்பாவுக்கு ஆத்திரம் பொங்கியது, ஆனாலும், அடக்கிக் கொண்டார்.

சீக்கிரமே அங்கிருந்து நகர்ந்தார்.

அப்படியே தியேட்டர்களிலே படத்தை காட்டினாலும், இவரே புடிச்ச படத்தைப் பார்க்க ஜனங்க வரணுமே அண்ணாச்சி? ஆளுகளுக்கும் பணம் கொடுத்துப் பார்க்க வைப்பாருன்னு சொல்லு வீகளோன்னு கேட்க நெனச்சேன். ஒரே அடியா மனுசனை டவுன் பண்ணப்படாதுன்னு இருந்துட்டேன் என்று 'தம்பிச்சி' சொன்னது ராஜப்பா காதில் விழத்தான் செய்தது.

அதைத் தொடர்ந்து அண்ணாச்சி வாய்விட்டுச் சிரித்த பலத்த ரசனைச் சிரிப்பு அவருக்கு வயிற்றெரிச்சல் உண்டாக்கியது.

மோசக்காரப் பயலுக ஏமாத்துக்காரனுக... தங்களைத் தாங்களே பெரிசா, பிரமாதமா நினைச்சுக்கிட்டுத் திரிகிறவங்க, மத்தவங்களை கேவலமா நினைக்கிற வேசகாரங்க....

இப்படி அவர் மனம் குமுறிக் குமைந்தது.

நமக்குத் தெரிந்தவர், ரொம்ப வேண்டியவர், நேருங்கிய நண்பர் என்கிற நிலையிலே இருக்கிற அண்ணாச்சியே இப்படி அபிப்பிராயப்பட்டால், மற்ற வங்க என்னதான் நினைக்கமாட்டாங்க, பேச மாட்டாங்க?

இவ்வாறு கேட்டது அவர் அறிவு.