பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்127


சரி. போகுது போ. நடிப்பும் வேண்டாம். பட சான்சும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் ராஜப்பா.

என்றாலும், அவர் மிடுக்கான குதிரை பூட்டிய வண்டியில் அடிக்கடி ஸ்டுடியோ பக்கம் போய்க் கொண்டுதான் இருந்தார். பட உலக நண்பர்களை அழைத்து பார்ட்டிகள் கொடுத்துக் கொண்டு தானிருந்தார். திடீரென்று தன் போக்குகளை மாற்றிக் கொள்ளக்கூடாது என்ற நினைப்பு அவருக்கு.

ராஜப்பா 'அர்ச்சுன ரசனை' உடையவர் தானா 'கிருஷ்ணலீலைகள்' பண்ணி மகிழும் மனத்தவர்தானா என்பது பற்றி திருநகர்வாசிகள் கருத்து பரிமாறியதில்லை. அவருடைய இதர குணாதிசயங்கள் அவர்களை பிரமிக்க வைத்திருந்ததனால், அவரது மன்மதத் தனயான நாட்டங்களில் மக்கள் கவனம் செலுத்த வில்லை போலும்.

அந்த விஷயத்திலும் அவர் ரசிகராகத்தான்--அந்தக் கலையின் சுவைஞராகவே- இருந்தார் என்பது அவருடைய நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.

மாநகரத்தில் ராஜப்பா பழகிய வட்டாரங்களில் அவருடைய அந்த ரசஞானத்துக்கு நல்ல விருந்து கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருந்தன.

அவருடைய குதிரை வண்டி காம்பீர்யத்தையும், அலங்கார நடவடிக்கைகளையும், பார்த்து, வியந்து, ரசித்து, மகிழ்ந்து போனவர்களில் குமாரி கல்யாணியும் ஒருத்தி. அவரது கவனிப்புக்கும் அபிமானத்துக்கும் வள்ளன்மைக்கும் இலக்கானவளும் கூட.

அவளும் சினிமா மோகத்தினால் ஈர்க்கப்பட்டு, சில ஸ்டார் நடிகையர் போல் தானும் உயர்ந்து, பணமும்