பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழி நல்ல தோழிதான் ★ 11

இத்தகைய இனிமைகளை ரசிக்காமல் இருந்து விட துடியுமா சந்திரனால்?

தோழி இல்லாத சமயங்களில், அவனுக்கும் தங்கத்முக்கும் என்ன பேசுவது என்றே புரியாமல் போய் விடுவதும் உண்டு. ராஜம்மா உடனிருந்தால் விஷயப் பஞ்சம் ஏற்படவே ஏற்படாதே என்று அவன் எண்ணுவான்.

தங்கம் சங்கோஜம் உடையவள். கலகலப்பாகப் பேசிப்பழகும் சுபாவம் அவளிடம் இல்லை. அதனால் சந்திரன்தான் பேச்சுக்குப் பொருள் தேடித் திண்டாட வேண்டிய அவசியம் ஏற்படும். சிலசமயம் அவன் பேச்சு அவளுக்கு ‘போர்’ அடித்துவிடும். ஆனால் அவளுடைய மெளனமே அவனுக்குப் பெரிய ‘போர்’ ஆக இருந்தது.

ராஜம்மா திடீரென்று தனது ஊருக்கப் போக நேர்ந்தது. திரும்பி வருவதற்குள் தங்கத்தின் காதல் வெறும் அரும்பு நிலையிலேயே இருக்காது என்று அவள் நினைத்தாள். இதங்குள் மலர்ச்சியுற்றிருக்கும். மனம் பரப்பும் நிலை வந்திருக்கும் என்று அவள் ஒரு கடிதத்தில் எழுதினாள். எல்லாம் வழக்கம் போல் தான் என்று தங்கம் எழுதிய பதில் தோழிக்கு திருப்தி தரவில்லை. ஆகவே அவள் சந்திரனுக்குக் கடிதம் எழுதினாள்.

“நான் எவ்வளவோ காதல் கதைகள் படித்திருக்கிறேன். சினிமாவிலும் நாடகங்களிலும் பலரகமான காதல் ஜோடிகளைக் கண்டிருக்கிறேன். வாழ்க்கையிலும் அநேக காதலன் காதலிகளையும், அவர்கள் காதல் முடிவுகளையும் பற்றி அறிந்தது உண்டு. எனக்கு சந்திரன்-தங்கம் காதல் அதிசயமாகவே தோன்றுகிறது. இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறதே அது! இதை அறியும்போது சிரிப்பதா அனுதாபப்-