பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 ☆ வல்லிக்கண்ணன்


அம்மாளுக்குக் கோபம். அவள் சத்தம் போட்டாள். அந்த ஆத்திரத்தை பாக்கியம் குழந்தைகள் மீது திருப்பினாள். அன்று சமையலை சுவையில்லாதவாறு கெடுத்து வைத்தாள். அடிக்கடி முண முணத்தாள்.

"இனிமேல் நீ சரிப்பட்டு வரமாட்டே!" என்று அம்மா, கணக்குப் பார்த்து ரூபாயைக் கொடுத்து, அவளை அனுப்பி விட்டாள்.

பாக்கியத்துக்கும் முன்னாடி ஒருத்தி வேலை பார்த்தாள். வயது சற்று அதிகமானவள். 'பெரியம்மா' என்றே எல்லோரும் அவளை அழைத்தனர். அவள் நன்றாக வேலை செய்வாள் என்றுதான் தோன்றியது. ஆனால், வேலை செய்கிற நேரங்களை விட அதிகமான ஓய்வு வேளைகளை அந்தப் பெரியம்மா விரும்பினாள் என்பது மூன்று நான்கு நாட்களிலேயே புரிந்து விட்டது. காலையில் நேரம் கழித்துத்தான் எழுந்திருப்பாள். மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு, உண்ட களைப்பால் கண்ணயர்கிறவளை, பெரியம்மா காப்பி போடலியா?" "நேரமாச்சு பெரியம்மா!" என்று தார்க்குச்சி போட்டு"த் தான் எழுப்ப வேண்டும். மேலும், ஒவ்வொரு வேலைக்கும் அதைச் செய், இதைச் செய், என்று துண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

"நான் எப்படி இருக்க வேண்டியவ! என் மகன் மட்டும் சரியாக இருந்தால், நான் இப்படி புழுக்கை வேலை செய்துக்கிட்டு சங்கடப்படனுமா? அவன் ஊரிலே இல்லாத விதமா அதிசயப் பெண்டாட்டி வந்து சேர்ந்து விட்டாள்னு நெனச்சு, அவளை தோள் மேலே துர்க்கி வச்சுக்கிடடுக் கூத்தாடுவானே! அப்புறம் அந்தத் தேவடியா என்னை மதிப்பாளா? எனக்கு அங்கே இருப்புக் கொள்ளலே. எங்காவது வேலை செய்து காலம் கழிக்கலாமன்னு கிளம்பிட்டேன்" என்று ஒரு நாள் அவள் தன் வரலாற்றைப் புலம்பினாள்.