பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 ☆ வல்லிக்கண்ணன்


தீர்மானித்து, அத் தீர்மானத்தை உடனடியாகச் செயலுக்குக் கொண்டு வந்தார்கள்.

பெரியவர்கள், தெரியாதவர்கள்தான் இப்படி ஏறுமாறாக வந்து வாய்க்கிறார்கள்! நம் ஊரிலிருந்து, சொந்தக்காரங்க வீட்டிலிருந்து ஏழைச் சிறு பெண் ஒருத்தியை அழைத்து வந்தால், திருப்திகரமாக நடந்து கொள்ளக்கூடும் என்று சிவராமன் எண்ணினார். அவ்வாறே, ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். பதின்மூன்று வயது இருக்கும். அவளுக்கு சகல வீட்டு வேலைகளையும் செய்து அனுபவப்பட்டவள்தான். குழந்தைகளிடம் பிரியமாக இருந்தாள். குழந்தைகளும் 'அக்கா, அக்கா' என்று அவளிடம் ஆசையோடு பழகின.

அவள் அவ்வீட்டுப் பெண் மாதிரியே தானும் நடத்தப்படுவாள் என்று எதிர்பார்த்ததாகத் தோன்றியது. குழந்தைகளுக்குப் புதுசாகச் சட்டைகள் தைக்கும் போது, தனக்கும் பாவாடை, தாவணி சட்டைகள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். எனக்கு ஒண்ணும் இல்லையா மாமா என்று கேட்கவும் செய் தாள். அடிக்கடி சினிமாவுக்குப் போக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். குழந்தைகளுக்காக வாங்கப்பட்டுள்ள பவுடர், கண் மை, வாசனைச் சாந்து, ஹேராயில், ரிப்பன் முதலியவற்றை அவள் தாராளமாகப் எடுத்து உபயோகித்தாள். வறுமைச் சுழலில் வாழ்ந்தவள் ஆதலால், இங்கு வளங்களைக் கண்டதும் 'காய்ந்த மாடு கம்பிலே விழுந்தது போல்' பேராசையோடு அனைத் தையும் அனுபவிக்கத் துடித்தாள். நெய்யை வெறும் வாயில் தின்றாள். சீனியை வாய் நிறைய அள்ளிப் போட்டுக் கொண்டாள். சிறுகுழந்தைகளுக்காக வாங்கி வைத்திருக்கும் திண்பண்டங்களையும், பிஸ்கட் தினுசுகளையும், தெரிந்தும் தெரியாமலும் அமுக்குவதோடு