பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்141

 உரையாடிக் களிக்கும் மனமும் திறமையும் பெற்றிருந்தார்கள்.

ஒருநாள் இரவு பஞ்சவர்ணத்தம்மாள் சினிமாவுக்குப் போய் விட்டாள் இரவுக் காட்சிக்கு. அவள் திரும்பி வந்ததும், சிவராமன் கோபித்துக் கொண்டார். "இரவு 10 மணிக்காட்சிக்குத்தானா போக வேண்டும்? மாட்னிக்குப் போகிறதுதானே? இல்லாவிட்டால், கேட்டுக் கொண்டு 8-30 மணிக்காட்சிக்குப் போறது!' என்று உபதேசித்தார்.

அது அவளுக்குப் பிடிக்க வில்லை. வேலைகளை முடித்து விட்டுத்தானே போகணும்? சாயங்காலக் காப்பி போடனும், ராத்திரிச் சாப்பாடு தயாரிக்கணும், இரவுக் காட்சிதான் செளகரியம். வேலைக்கு இடைஞ்சலாக இராது’ என்றாள்.

பிறகு, வாரம் தோறும் அவள் அவ்வாறே செய்யலானாள். அவள் ஒரு மாறுதலாக சினிமா பார்க்கத்தான் போகிறாள் என்றே சிவராமன் எண்ணினார். அது தவறு என்பது அவருக்கு விரைவிலேயே புரிந்து விட்டது.

“உங்க் வீட்டு வேலைக்காரியை தியேட்டரிலே பார்த்தேன். ஸார், கூல்ட்ரிங்க்ஸ் விற்பானே ஒருத்தன்---தள்ளு வண்டியிலே வச்சு-சிவப்பா, கட்டுகுட்டுனு, சிலிர்த்து நிற்கும் கிராப்பும் சிரிச்ச முகமுமா-அவனுக்கும் அவளுக்கும் சிநேகம் போலிருக்கு! அந்த அம்மா தன்னை மறந்து அவன்கூடப் பேசிச் சிரிச்சுக்கிட்டு நிக்கறதை நான் பார்த்தேன்’' என்று அவரது ஆபீசைச் சேர்ந்த ஒருவன் ஒரு நாள் அவரிடம் சொன்னான். அவருக்குத் திக்கென்றது.

அன்றே அவர் பஞ்சவர்ணத்தம்மாளிடம் கண்டிப்பாகச் சொல்லி வைத்தார். இனிமேல் அவள் சினிமா