பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148வல்லிக்கண்ணன்


பல பேரோடு குரூரமாக-ஒரு வக்கிரத் தன்மையோடு. விளையாடி விடுகிறது.

பரிபூரண ஆனந்தர் விஷயத்திலும் அப்படித்தான் அது நடந்து கொண்டது.

அறுபத்து நான்காவது பிறந்த நாளன்று ஆனந்தர் மகிழ்ச்சியோடு காலை உலா போய் கொண்டிருந்தார். நடை மேடை மீதுதான் போனார்.

ஆனாலும், வேகமாக வந்த லாரி ஒன்று தடம் தவறி தாறுமாறாக ஓடி, பிளாட்பாரத்தின் மீது ஏறி ஆனந்தரைத் தாக்கியது. அவரைக் கீழே தள்ளி நசுக்கி, ஒரு மரத்தின்மீது மோதிவிட்டு நின்றது.

உரிய முறைப்படி காரியங்கள் எல்லாம் நடைபெற்றன. ஆனந்தர் உடல் சிதைந்து உருக்குலைந்து போயிருந்தது.

இவர்தான் பரிபூரண ஆனந்தர் என்று அடையாளம் கூடக் காண இயலாத விதத்தில் அவர் முகம் துவையலாகி விட்டது! பாவம்!

செளராஷ்டிர மணி தீபாவளி மலர். 1986