பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 ★ வல்லிக்கண்ணன்

கடல் அழகாக, மிடுக்காக தோன்றியது. நெடுகிலும் கட்டு மரக் கட்டைகள், பரப்பி வைக்கப்பட்ட வலைகள், வலைகளை செப்பனிடும் ஆட்கள்.

இங்கு மீனவர்கள் அதிகம் என்று தெரிகிறது என எண்ணியபடி அவர் நடந்தார். நீளத்துக்கு வரிசையாய் சிறுசிறு குடிசைகள். அவற்றில் ஆட்கள் இருப்பதாகத்தான் தோன்றியது.

அங்கே நின்ற ஒருவனை நெருங்கி, “இங்கே டீ, காபி ஏதாவது கிடைக்குமா? கிளப்புக் கடை எதுவும் இல்லையா?” என்று கேட்டார்.

“தண்ணிதான் கிடைக்கும். அந்த கடைசி குடிசைகளில் காய்ச்சுறாங்க...” என்று அவன் சொன்னான். அவன் குறிப்பிட்டது சாராயத்தை என அவர் புரிந்து கொண்டார்.

“எதுக்கும் அதோ அந்த கடையிலே கேட்டுப் பாரும்,” என்று அந்த ஆள் கை காட்டினான்.

அவன் காட்டிய திக்கில் இருந்த, கடை மாதிரித் தோன்றிய ஒரு இடத்தை நோக்கி அவர் நடந்தார்.

கடைதான் வாழைப்பழம், மிட்டாய் தினுசுகள், முறுக்கு, சர்பத் எல்லாம் கிடைக்கும். அடும்பும். டீ பாத்திரங்களும் இருந்தன. பால் இல்லை; அதனால் டீயும் இல்லை.

தகவல் அறிந்து கொண்ட சிவகுரு சர்பத் வாங்கிக் குடித்தார். பிறகு கடலோரமாகவே நடந்து இயற்கை வனப்புகளை ரசித்தார். ஒரு இடத்தில் சிறிது நேரம் நின்றார்.

கடல் கண்களுக்கு விருந்து. அலைகளின் நடனம் அலுப்பு தராத இனிய காட்சி. விரிந்து கிடந்த நீலவானம்