பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 161

வேண்டும். அதற்கு உங்கள் மாதிரி ஆற்றல் உள்ள நபரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு பெர்சனல் அசிஸ்டன்டாக இருந்து ஆவன செய்ய, நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மாதம் ஐநூறு ரூபாய் தருவேன். தங்கும் இடம், இதர வசதிகள், சலுகைகள், எல்லாம் உரிய முறையில் கவனிக்கப்படும். என்ன சொல்கிறீர்கள்?” என்று தொழில் அதிபர் ‘பிசினஸ் லைக்காக’ப் பேசினார்.

அவன் சிறிது நேரம் யோசனை பண்ணுவதுபோல் இருந்தான். பிறகு, ‘சம்மதம்’ என்றான்.

“ஆல் ரைட்...... இப்படிக் கொடுங்கள் கையை! என்று உற்சாகத்தோடு அவன் கையைப் பற்றிக் குலுக்கினார் அவர். உங்களுக்கு செளகரியப்படுகிறபோது, என்னோடு புறப்படலாம்” என்றார். அவனுக்கு எப்போதும் செளகரியம்தான். ஆகவே, ஆன்றே அவருடன் புறப்பட்டு, அவர் ஊர் போய்ச் சேர்ந்தான் ராஜன்.

தொழில் அதிபர் அவனுக்கு அதிகமான வேலைகள் ஒதுக்கிவிடவில்லை. இருந்த வேலைகளை எளிதில், சீக்கிரமே முடித்துவிடும் ஆற்றல் அவனுக்கு இருந்தது. எனவே, வசதிகள் மிகுந்த சூழ்நிலையில் ஓய்வாகப் பொழுது போக்கும் சுகவாசி மாதிரியே அவனும் நாளோட்டினான்.

செல்வநாயகம் பிசினஸ் விஷயமாக அடிக்கடி வெளியூர்களுக்குப் போய்க் கொண்டிருந்தார். சில சமயம் அவனையும் உடன் அழைத்துச் சென்றார். அநேக தடவைகள் அவன் பங்களாவிலேயே தங்விகிட நேர்ந்தது.

அதற்காக அவன் வருத்தப்படவில்லை. பிறகு, அதுபோன்ற சந்தர்ப்பங்கள் கிடைப்பதற்காக அவன்