பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 ★ வல்லிக்கண்ணன்

ஆனந்தமே கொண்டான். காரணம், திருமதி செல்வ நாயகத்தின் அன்பும் உபசரிப்பும் தனிப்பட்ட கவனிப்பும்தான்.

அதிபர் ராஜனை அழைத்து வந்ததுமே தன் மனைவி வசந்தாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவளும் சமூகப் பிரமுகரின் அந்தஸ்துக்கு ஏற்ற தகுதி கள் பெற்ற துணைவியாகவே விளங்கினாள்.

அவள், வசீகர சக்தியும் திருப்திப்படுத்தும் குண நலன்களும், சிரித்துச் சிரித்து-சிரிக்கச் சிரிக்கப் பேசும் திறமையும் கொண்டிருந்த ராஜனுடன் ‘ஃபிரீயாகவே’ பழகினாள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவ்விரு வரும் ரொம்ப ஃபிரியாகப் பழகுவதற்கும் இனிமையாகப் பொழுதுபோக்குவதற்கும் துணை செய்தன.

அவன் பெரிய இடத்துப் பெண்மணிகள், சொஸைட்டி ‘வண்ணப்பூச்சி’கள் உத்தியோகம் பார்க்கும் நாகரிக நங்கையர்பற்றி எல்லாம் சுவாரஸ்யமான தகவல்களை அவளுக்குத் தந்தான். அவ்வப்போது அவளைப் புகழ்ந்து பேசவும் தவறவில்லை.

அவனுடைய ஆற்றலையும், அனுபவத்தையும் ஒரு சமயம் அவள் வியந்து பேசியபோது அவன் மோகன மாய் சிரித்தான். ‘என் பிசினசின் முதலிடே அது தானே!’ என்றான்.

பிசினஸா? என்ன பிசினஸ்? என வியப்பால் அகன்ற கண்களோடு அவனைப் பார்த்தாள் வசந்தா.

“வாழ்க்கை பிசினஸ்தான்!”

“அப்படியும் ஒண்னு இருக்குதா?” என்று கேட்டு, கலகலவெனச் சிரித்தாள் அவள்.

“வாழ்க்கையை ஒவ்வொருவரும் அவரவர் மனப் பண்புக்குத் தக்கபடி மதிப்பிடுவார்கள். அது ஒரு