பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 165


“உங்களுக்கு உண்மை தெரியாது. இதிலே அவருக்கு ரொம்ப சந்தோஷம். அவருடைய திட்டமும் ஏற்பாடும் வெற்றி பெற்றுள்ளதை அறிந்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதுதான் அவர் சுபாவம்.”

அவள் புதிராகப் பேசுகிறாள் என்று பட்டது அவனுக்கு. விஷயம் புரியாமல் தலையைச் சொறிந் தான். ‘நீ என்னதான் சொல்கிறாய்? தயவு பண்ணி எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லு’ என்றான்.

வசந்தா புன்னகை புரிந்தாள். ‘எங்களுக்குக் குழந்தை இல்லை. கல்யாணமாகிப் பல வருஷங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. அவருக்குப் பிள்ளை பிறக்கும் என்கிற நம்பிக்கைக்கிடமில்லை. ஆனாலும் எங்களுக்கும் குழந்தை தேவை. அவருடைய திரண்ட சொத்துக்கு செல்வத்துக்கும் வாரிசு வேண்டும். தேவைப்படுகிறவர்களின் தேவையை அனுசரித்து, திருப்திகரமாக உதவுவதை பிசினசாகக் கொண்டுள்ள உங்கள் உதவியை அவர் நாடினார். நீங்களும் உதவினீர்கள். அவ்வளவுதான் விஷயம்!’ என்றாள்.

“ஓகோ, இதுதான் சொந்த விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் தொழில் அதிபரின் பிசினஸ் ரீதியான ஏற்பாடோ? ஆதியிலேயே இது எனக்குப் புரியாமல் போய்விட்டதே! நான் என்னவோ இது தனிப்பட்ட காதல் வெற்றி என்று எண்ணி ஏமாந்திருந்தேனே!” சான்று அவன் தன் நெஞ்சோடு புலம்பிக் கொண்டான்.

அதற்காக அவன் ரொம்ப நேரம் வருத்தப்படவும் இல்லை. இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? பிசின்ஸ் என்றால் பிசின்ஸ்தானே!

தொழில் அதிபர் செல்வநாயகம் அன்று மாலை ராஜனை தனியாகச் சந்தித்தார். “மிஸ்டர் ராஜன், நம்ம பிசினஸ் டீல் திருப்திகரமாக நிறைவேறிவிட்டது. இனியும் உங்களுடைய சொந்த பிசினஸ் முயற்சிகளுக்கு

தோ-11