பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 ★ வல்லிக்கண்ணன்

தலையெடுக்கும்; வெறியாட்டம் போடும். காளிப்பேட்டை என்று சொன்னாலே, “ஓ, அந்த இடமா?” என்கிற எதிரொலியை எழுப்பக் கூடிய சிறப்புப் பெற்றிருந்தது அது.

முன்னொரு காலத்தில் கண்ட கண்ட இடத்திலெல்லாம் கள்ளுக்கடைகள் ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது காளிப்பேட்டை எவ்வளவு கோரமாக விளங்கியது தெரியுமா? ‘நிர்-1, மதுரமான தென்னங்கள்ளு இங்கே கிடைக்கும்’ என்று பளிச்சிடும் எழுத்துக் களோடு காளிப்பேட்டையில் மூலைக்கு மூலை கடைகள் இருக்கும். அவற்றின் முன்னே எப்போதும் ஒரு கூட்டம்; ஓயாத கூச்சல்; திடீர்ச் சண்டைகள். எந்தச் சமயத்திலும் அரிவால் ஓங்கப்படும். சதக்! பனங்காய் சீவுகிற மாதிரி ஆளையே வெட்டி விடுவார்கள்!...

இந்த விதமாக-இன்னும் தினுசு தினுசாக அந்த ஊர்ப் பெருமைகள் பேசப்படும். சில ஆசாமிகளின் பெயர்கள் பயம் கலந்த மரியாதையோடு உச்சரிக்கப்படும். “அவங்க எல்லாரும் போயிட்டாங்க, கள்ளு சாராயம் வகையராகவும் போயிட்டுது. இருந்தாலும் அவங்க வாரிசுக இல்லாமல் போகல்லே. அவங்களுக்குக் குடிக்கிறதுக்கும் கிடைக்கத்தான் செய்யுது. குடித்துப் போட்டு, ராத்திரி நேரங்களிலே தெருவில் அட்டகாசம் பண்றதுதான் அவங்க வேலை. போலீசு வருதுன்னு சொன்னா, அவங்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைச்சிடும் ஆசாமிக எங்கே போவானுக, எப்படிப் பம்முவானுக என்றே தெரியாது. எல்லாரும் ஒரு நிமிஷத்திலே அவுட்! தெரு வெறிச்சோடிக் கிடக்கும்!” என்று சிலர் வியப்போடு அறிவிப்பார்கள்.

சுயம்புலிங்கம் அவற்றையெல்லாம் சட்டை செய்வது கிடையாது. நமது அலுவல்கள், குறிப்பிட்ட