பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்181


நாக்கு உச்சரிக்கவில்லை. அவன் மண் போம்மை மாதிரி நின்றான். அவனைச் சுற்றிலும் கும்பல் கூடி விட்டது.

'நீ இனிமேல் இந்தத் தெருவில் அடி எடுத்து வைத்தால் தொலைந்தே என்ன நடக்கும்.கிறதை அப்புறம் பார்த்துக் கொள்' என்று உமினார் பெரியவர்.

ரகுராமனின் கண்கள் வாசல்படியின் பக்கம் ஓடின. அங்கு அவள் நின்று கொண்டுதாணிருந்தாள். வேடிக்கை பார்த்துச் சிரிக்கும் களிப்பு அவள் முகத்தில் நிறைந்து காணப்பட்டது.

அவனுக்கு 'சீ' என்றாகி விட்டது. 'சே என்ன உலகம்' என்ன மனிதர்கள்! எனக் குமைந்தது அவன் உள்ளம்.

நிமிர்ந்து பார்க்காமலே நடையைக் கட்டினான் அவன். அன்றே இரவோடு இரவாக ரகுராமன் அந்த வீட்டை காலி செய்தான் . இதரை விட்டு வெளியேறினான்.

ரகுராமன் வாழ்க்கையில் இவ்விதம் எத்தனையோ அனுபவங்கள் குறுக்கிட்டன. அவன் அந்த ஒரு பாடத்தை பலமுறை உச்சரித்து விட்டான். எப்பவும் அவனுக்கு தவறான விடையே கிடைத்து வந்தது.

அவனுக்காக அனுதாபப்பட்டவர்கள் பலர் 'வாழத் தெரியாத அப்பாவி' என்றார்கள் சிலர். 'எதை எப்படிச் செய்யவேனும் என்று தெரிந்து கொள்ளாதவன்சாமார்த்தியம் போதாது' 'மடையன்' 'பைத்தியம்' 'காதல் பித்து'-இப்படி அவனுக்குக் கிடைத்த சான்றுகள் பலவாகும்.

லைலாவும், மஜ்னுவும் காவியத்தில்தான்னன் பதுசரி யல்ல. ஒரு மஜ்னுவுக்கு ஒரே லைலா என்பது வேண்டு

தோ-12