பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
184*வல்லிக்கண்ணன்


குளம் பாலத்துக்கு கிழக்கே ஒரு ஓடை ஓடிக்கிட்டிருக்கு. புள்ளெயைப் போட்டு பலாப்பழம் எடுத்த ஒடையின்னு அதுக்குப் பேரு. அதுக்கு ஏன் அந்த பேரு வந்தது?" தம்பிமார்களுக்குத் தெரியவில்லை "நீங்களே சொல்லுங்க அண்ணாச்சி", என்றார்கள்.

"ரொம்ப காலத்துக்கு முந்தி அது நடந்து எத்தனையோ தலைமுறை ஆகுது. எவளோ ஒரு பொம்பிளை செய்த அசட்டுத்தனமான வேலையை நித்தியமா, நிரந்தரமா அது நினைவுபடுத்திக்கிட்டே இருக்கு!"-

"அது என்ன விசயம், அண்ணாச்சி?"

“ஒரு பொம்பிளை, ஒக்கல்லே புள்ளையை வச்சுக்கிட்டு அந்தப் பக்கமா வந்திருக்கா. ஒடையிலே ஒரு பலாப்பழம் உருண்டு புரண்டு வாறதை அவ பார்த்தா, பார்த்தானா? அவளுக்கு பலாப்பழத்து மேலே ஆசை உண்டாயிட்டுது. அதை புடிச்சி எடுத்துரலாம்னு தோணிச்சு. ஒக்கல்லே இருந்த புள்ளையை ஓடைக் கரை மேலே படுக்க வச்சிட்டு பலாப்பழத்தை புடிக்கப் போனா, ஓடையிலே தண்ணி நெறைய. அது வேகமாகவும் ஓடுது. அவ கைக்கு எட்டாம பலாப்பழம் உருண்டு, புரண்டு போயிக்கிட்டே இருக்கு. அவ அதை விரட்டிகிட்டே போறா.

"அவ கரையிலே படுக்கப் போட்டிருந்த பச்சப்புள்ளை, கரை சரிவா இருக்கறதுனாலே, உருண்டு, உருண்டு ஓடைத் தண்ணியிலே விழுந்திட்டுது. அதை தண்ணி அடிச்சிக்கிட்டுப் போகுது. புள்ளை கத்துது. பலாப்பழ ஆசையிலே அலையிற அம்மாக்காரி காதுலே அது விழலே. 'ஏய் சவத்துப் பய பலாப் பழமே, நீ எங்கிட்டே ஆப்பிடாமப் போயிருவியா? நான் உன்னை