பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 21

அல்லது மறுத்தோ, பத்திரிகைகளுக்குக் கடிதங்கள் எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.

சுந்தமூர்த்தி ஒரு இன்டலெக்சுவல் - நல்ல அறிவாளி-சரியான அறிவுஜீவி என்று அவரை அறிந்திருப்பவர் குறிப்பிடுவது வழக்கம். அதில் அவருக்கும் பெருமைதான்.

“சுந்தரமா? அவனுக்கு என்ன தெரியும்? சும்மா புத்தகங்களை வச்சுப் படிச்சுக்கிட்டிருக்கத் தெரியும், மற்றபடி அவன் ஒரு இழவுக்கும் லாயக்கில்லை!”

இது சுந்தரமூர்த்தியின் உறவினர்களுடைய அபிப்பிராயம்.

அவர் மனைவி மீனாட்சிகூட அவருடைய படிப்பையும், சகல பிரச்னைகள் சம்மந்தமான கருத்து உலுப்புதல்களையும் பெரிதாக மதிப்பதில்லை.

"கடைக்குப் போயி நல்ல சாமானாப் பார்த்து வாங்கி வரத் துப்பில்லை. எப்பத் தேங்கா வாங்கி வந்தாலும் அழுகலாகத்தான் இருக்கும். காயைக் கொட்டிப் பார்த்து நல்ல தேங்காயா எடுக்கத் தெரியாது. கடைக்காரன் கொடுத்ததை வாங்கிக்கிட்டு வந்து நிற்பாக, காய்கறிகளையும் பார்த்து வாங்க சாமர்த்தியம் போதாது. சொத்தை கொள்ளை வாடல் வதங்கல்களை எல்லாம் கடைக்காரங்க இவக தலையிலே கட்டிடுவாங்க. வி லையும் அவன் கேட்டதைக் குறைக்காமல் கொடுத்துடுவாக, பேரம் பேசத் தேரியாது...”

இப்படி எவ்வளவோ அடுக்குவாள் அவள்.

சிலசமயம் சில்லறையைச் சரியாக எண்ணிப் பார்த்து வாங்காமல், கடைக்காரன் கொடுப்பதை அப்படியே வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு

தோ-2