பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ★ வல்லிக்கண்ணன்

மாக இருப்பதைக் கவனித்ததும் ‘அவங்க நம்மைப் பத்தித்தான் பேசிக்கிறாங்க’ என்று அவன் மனம் உறுதி கூறியது அவர்களது கண்கள் பேசிய ரகசியம் அவன் மனசைக் கிளுகிளுக்க வைத்தது.

“பெண் எப்போது பெரியவள் ஆகிறாள்?” என்றொரு கேள்விக்கு, ‘அவள் உள்ளத்து ரகசியங்களை அவளுடைய கண்கள் பேசக் கற்றுக் கொள்கிறபோது’ என்று ஒரு புத்திசாலி பதில் கூறியிருந்தான். அது கரெக்ட்! இந்தப் பெண்களும் பெரிய ஆளுகதான்! என்று அவன் மனக்குறளி பேசியது. ‘சரி, நமக்கென்ன? நாமும் பார்த்து வைப்போமே! சேதாரம் இல்லாத பொழுதுபோக்கு ஹார்ம் லெஸ் பாஸ் டைம்!’ என்று அவன் மனம் வழி வகுத்துக் கொடுத்தது.

காஞ்சனா கண்ணாடி முன் நின்றபோது வசந்தா வந்து சேர்ந்தாள், சும்மா வரவில்லை “விஷயம் தெரியுமாடி உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.

முன்பெல்லாம் காஞ்சனா அரைமணி நேரம் முக ஒப்பனைக்காக ஒதுக்கினாள் என்றால், இப்போது சில தினங்களாக முக்கால் மணி நேரம் கண்ணாடி முன் போக்கினாள். பவுடரைப் பூசிப் பூசி அழித்தும், கண் மையைத் தீட்டியும் நீட்டியும், நெற்றிப் பொட்டை விதம் விதமாக வைத்தும் திருத்தியும், பல்வேறு கோணங்களில் ‘போஸ்’ கொடுத்துப் பொழுது போக்கினாள். நான் அவளைப்போல இருக்கேனா? இல்லை, இவளைப்போல இருக்கேனா? அந்த ஸ்டார் மாதிரி தோற்றம் இருக்குன்னு சில பேரு சொல்றாங்களே, அது நிசமா?’ என்று கண்ணாடியை அடிக்கடி கேட்டுக் கொண்டாள். எவளோ ஓர் அழகியின் கண்ணாடி அன்பாகப் பதில் சொல்லும் என்று அவள் கதையில்