பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36வல்லிக்கண்ணன்


"அவனுக்குத் தன் அழகையும் அலங்காரத்தையும் காட்றா, வெட்கங் கெட்டவ!" என்று, தன்னை மறந்து சிநேகிதியை மனசில் பழித்துக் கொண்டே காஞ்சனா நடந்தாள்.

ஓடி வந்து அவளைப் பிடித்து நிறுத்திய வசந்தா, "டியே, என்னடி இது? கூப்பிடக் கூப்பிட நீ பாட்டுக்குப் போறியே?" என்றாள்.

"நீ நடத்தற லவ் சீனை வேடிக்கை நிற்கணம் கிறியா?".

பொறாமையும் கோபமும் காஞ்சனாவின் பேச்சில் வெடித்தன.

வசந்தாதிகைப்புடன் அவள் முகத்தைப் பார்த்தாள். "என்ன.. நீ...வந்து..."திணறினாள்.

...தெரியும்டீ, திருடி! இப்போல்ல புரியுது!" என்று கத்தினாள் காஞ்சனா.

"என்ன, என்ன புரியுது?"

நீ உன்... உன்... காதலை மறைக்கிறதுக்காக அடிக்கடி என்னைக் கிண்டல் பண்ணி வந்திருக்கிறதே! அவரைப் பத்திப் பேசறது உனக்கு இனிப்பாயிருந்திருக்கு. அதனாலே எனக்காகப் பரிந்து பேசற மாதிரி வாய் ஓயாது அவர் புரவோலம் பாடியிருக்கிறே! அவர் வீட்டிலே அம்மா இருக்கிறா, கிழவி இருக்கிறான்னு சொல்லி என்னை ஏமாத்தி, நீ அடிக்கடி அவரைச் சந்திச்சு இனிச்சிப் பேசிக்கிட்டு வந்திருக்கிறே..!"

வசந்தாவுக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. "ஆமாம்டி ஆமாம்; அப்படித்தான். அது என் இஷ்டம். உனக்கென்ன அதைப் பத்தி?’ என்று முறைத்தாள்.

"நீ எப்படிப் போனா எனக்கென்னடி? ரொம்ப நல்லவ மாதிரி நடிச்சுக்கிட்டு என்னைக் கேலி பண்ணினியே, அதுக்காகத்தான்..."