பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48வல்லிக்கண்ணன்

 பூர்த்தி செய்வதன் மூலம் சிறிதளவு லாபம் பெறமுடியும் என்பதை அனுபவ பூர்வமாக நிரூபித்துக் கொண்டிருந்த பிச்சையாப்பிள்ளை சொன்னது போல-- 'கைலாசம்பிள்ளைக்கு உசிரு!. -அதுவும் எப்பவும் வீட்டில் இருக்கும்.

ஆண்டியாபிள்ளையும் - அண்ணாச்சியும் பேசி மகிழ்கிற வேளையில், வீட்டில் இருக்கிற தீனி தினுசுகள் தாராளமாக வந்து சேரும். வேர்க்கடலைக்குப் 'பக்கமேளமாக'க் கருப்புக் கட்டித்துண்டு.

நேரம் போவதே தெரியாது. சில சமயம் ஆண்டியா பிள்ளை, துண்டை விரித்துப் படுத்துப் பேசுகிறவர் அப்படியே தூங்கிப் போவதும் உண்டு. தூங்குகிறவரை அண்ணாச்சி தட்டி எழுப்பமாட்டார்.

'பாவம், அலுப்பு நல்லாத் தூங்கட்டும்” என்று விட்டு விடுவார். ஆண்டியாபிள்ளை தானாக விழிப்பு வந்து எழுந்து உட்கார்ந்து, அசந்து தூங்கிட்டேன் போலிருக்கே! இன்னமேதான் சாப்பிடனும் என்பார்.

அண்ணாச்சி எவ்வளவு உபசரித்தாலும் ஆண்டியா பிள்ளை அங்கே சாப்பிட மாட்டார். 'சொந்தக்காரங்க’ வீட்டுக்கே போய்விடுவார்.

இந்த நட்பு பலப்பல வருடங்களாகத் தொடர்ந்து வளர்வது. கைலாசம்பிள்ளை வீட்டைவிட்டு வெளியே போவது கிடையாது. அதிலும் அவருக்கு ஆஸ்துமா கடுமையாகிவிட்ட பிறகு வீட்டின் தெரு வாசல்படியைத் தாண்டியது இல்லை. ஆகவே, உறவினர் வீட்டுக் கல்யாணம், சாவு, ஏதேனும் விசேஷம் என்று அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் போய் வருவதும் நின்றுவிட்டது.

ஆண்டியாபிள்ளை மாதிரி வீடு தேடி வருகிறவர்கள்தான் சூரிய வெளிச்சமும், புதிய காற்றும்போல,