பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 வல்லிக்கண்ணன்

 ஆண்டியாபிள்ளையின் முகத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்திருக்க வேண்டும். திடுமென நெஞ்சில் குத்துவிட்ட மாதிரி.....

அவருக்கு மூச்சே நின்றுவிடும் போல் தோன்றியது. அதிர்ச்சி அவர் முகத்தில் வெளிச்சமாயிற்று. நம்ப முடியாதவர்போல் கேட்டார்.

"ஆங்... என்னது?

"அண்ணாச்சி இறந்து எட்டு மாதங்கள் ஆச்சு...”

ஆண்டியாபிள்ளை திகைப்புடன், "என்ன செய்தது...? என்றார்.

ஆஸ்துமாதான். ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டது..."

சே, எனக்குத் தெரியாதே! என்று முணுமுணுத்தார் பிள்ளை. அவர்களை பார்க்க வராமலே போயிட்டேனே!

குறுகுறு என்று உட்கார்ந்திருந்தார். வேறு எதுவும் சோல்லாமலே தரைமீது படுத்தார். கண்களை மூடிக் கொண்டார்.

சோமு அவரையே கவனித்தபடி இருந்தான். அவர் முகம் ஏதோ வேதனையைக் காட்டுவதாக அவனுக்குத் தோன்றியது, இந்தச் செய்தி அவருக்கு அதிர்ச்சி தந்து விட்டது என்று எண்ணினான்.

நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது. அவரை குரல் கொடுத்து உலுக்கலாமா என்று அவன் தயங்கினான்.

சட்டென்று அவரே நிமிர்ந்து உட்கார்ந்தார். எனக்கு என்னமோ ஒரு மாதிரி வருது...” என்று