பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56வல்லிக்கண்ணன்

 கவனிச்சுக்கிடுங்க. நாங்க எந்த ராத்திரியானாலும் வந்திடுவோம்’ என்று ஆச்சியும் மகளும் திரும்பத் திரும்பச் சொல்லிவிடடுப் போனார்கள்.

வீட்டோடு இருந்து உழைத்து, தனது தேவைகளைக் கவனித்துப் பணிவிடை புரியும் பெரிய அம்மாவின் இந்தச் சின்னக் கோரிக்கையை, தட்டிக்கழித்து, என்னாலே முடியாது என்று அடித்துச் சொல்வதற்கு சுந்தரமூர்த்திக்கு மனம் வரவில்லை.

அவர்கள் போய்விட்டார்கள். அதிலிருந்து சுந்தரமூர்த்தியின் மன உளைச்சலும் ஆரம்பமாயிற்று.

திருநகர் தமிழ்மன்றம் ஆண்டு விழாவுக்குப் போவதா, வேண்டாமா என்று மனம் அரிக்கலாயிற்று. பையனுக்கு மத்தியான உணவு கொடுத்துவிட்டு, மூன்று மணி பஸ்சுக்குப் புறப்பட்டுப் போனால் சரிப்படுமா? அங்கே நிகழ்ச்சி முடிவதற்கு 9 அல்லது 9-30 ஆகிவிடலாம். அதுக்கு மேலேயும் நேரம் பிடிக்கலாம். கடைசி பஸ் இரவு 10 மணிக்கு. அதைப் பிடித்தால் வீடு திரும்ப 11 மணி ஆகிவிடும். அங்கே நண்பர்களுடன் பொழுது கழிந்து, ராத்திரி பஸ் கிடைக்காமல் போனால், ஊருக்குத் திரும்பமுடியாது. பையன் பசியோடு இருக்க நேரிடும். அவனுடைய அம்மாவும் ஆச்சியும் எந்த ராத்தியும் வீடு வந்து சேர்ந்து விடுவோம்’ என்று சொல்லிப் போயிருந்தாலும், அப்படி அவர்கள் திரும்பி விடுவார்கள் என்பது நிச்சயமில்லை. அநேகமாக மறுநாள் காலையில் பத்துமணி சுமாருக்குத்தான் வருவார்கள். பையன் ராத்திரி தனியாக எங்கே தங்குவான்? எங்கு படுத்துத் துங்குவான்? இப்படிப் பல குழப்பங்கள் அவர் மனசை அலைக்கழித்தன.

தன்னை நம்பி, பொறுப்பாக ஒப்படைத்துச் சென்றுள்ள சிறுவனை வெளியே நிறுத்திவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு தன் பாட்டுக்கு திருநகர் போவது