பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்65

 றையும் பறிக்கிறது என்ன திமிரு பார்றேன். இதை இப்படியே விட்டு விட்டால், ஆட்டைக் கடிச்சுமாட்டைக் கடிச்சு மனுசனையும் கடிக்க ஆரம்பிச்ச கதையாக மாறிவிடுமா, சும்மாவா? என்று பொரிந்து தள்ளினார் அவர்.

உழையாமலே அனுபவிக்கும் உரிமை கொண்டாடுவது பெரிய திருட்டு; பிறர் உழைப்பைச் சுரண்டி, அதன் மூலம் கொடுத்து வாழ்வது கொடிய திருட்டு என்பது அந்த மகா உபதேசியாரின் அறிவில் மின் வெட்டவில்லை.

பிறவிப் பெருமாள் காலைக் கடன்களை முடித்து, நீராடி, ஒரு கப் காப்பியையும் உள்ளே தள்ளி விட்டு, பூஜை அறைக்குள் புகுந்தார். ஒவ்வொரு நாளும் அவரும் அவரைப் போன்ற முதலாளிகளும் செய்கிற மாபெரும் காரியம் மணிக்கணக்கில் பூஜை பண்ணுவது தான். இரண்டு மணி நேரத்துக்குக் குறையாது பூஜை நேரம். பக்தி முற்றி விட்டால் பூஜை மூன்று- மூன்றரை மணி நேரம் வரைகூட வளர்ந்துவிடும். முதலாளி ஐயா கண்ணை மூடிக் கொண்டு கடவுளோடு உறவாடுகிற நேரத்தில், என்ன நேர்ந்தாலும்- 'எந்த ராஜா எந்தப் பட்டணத்தில் புகுந்து கொள்ளையடித்தாலும் - கண் திறந்து பார்க்கமாட்டார்; காது கொடுத்துக் கேட்க மாட்டார்.

இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் நெருக்கடிகளும் விபத்துக்களும் முன்னறிவிப்பும் தடபுடல் விளம்பரமும் செய்து கொண்டா வருகின்றன? இல்லையே?

வண்டிக்காரன் மாணிக்கம் நிதானமாகத்தான் வண்டி ஒட்டிச் சென்றான். மோசமான இடம், பாதை "பெரிய நொடி’, மிரளும் புது மாடுகள், எதிரே வந்த