பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66வல்லிக்கண்ணன்

 லாரியின் அலறலும் ஊளையும், ஒரமாக வந்த சைக்கிள்காரனின் வேலைத் தனங்கள் எல்லாமாய் கூடி விபத்துக்குக் களம் அமைத்து விட்டன. வண்டி குடை வண்டி போட்டு விட்டது. மாணிக்கத்தின் வலது தொடை மீது சக்கரம் ஏறியது.

சிலர் ஓடி வந்தார்கள். அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னார்கள். மாணிக்கத்தை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு வண்டியும் பண உதவியும் ஐயாவின் அனுமதியும் வேண்டும், ஆனால் எஜமான் பூஜையில் அல்லவா ஈடுபட்டிருக்கிறார்? ஜீவராசிகளின் துயரங்களை எல்லாம் காண மறுத்துக் கல்லாகிவிட்ட கடவுளோடு உறவாடுவதற்காக, மனித உணர்வுகளுக்குச் சமாதி கட்டிவிட்ட பணக்காரர் கண்களை மூடிக்கொண்டு பக்திப் பாடல்களை முணமுணத்தபடி இருக்கிறாரே; அவர் காதுகளில் மனிதனின் வேதனைக் குரல் படுமா?

விண்ணகத்தின் எதிர்கால ஸீட் ரிசர்வேஷனுக்காக நிகழ் காலத்தின் பெரும்பகுதியை வீணே செலவு செய்வதில் ஈடுபட்டிருந்த முதலாளியின் மனக்கதவும் திறக்க வில்லை.

நஷ்டமும் கஷ்டமும் வண்டிக்காரனுக்குத்தானே? இச்சில்லறை விவகாரங்களைப் பற்றி எல்லாம் பெரிய வீட்டு ஐயா கவலைப்பட முடியுமா என்ன? அவரைப் பொறுத்த வரையில் ஒரு ஆள் போனால் இன்னொரு ஆள்! துட்டை வீசினால் நீ... நான் என்று எத்தனையோ பேரு ஓடி வருவாங்க, பணத்துக்குத்தான் பஞ்சம். ஆள்களுக்குமா பஞ்சம் இந்த உலகத்திலே!

பூஜையை முடித்த பிறகு, இட்டிலி தோசைகளுக்கு அருள் புரிந்து தீர்த்த பின்னர் பிறவிப் பெருமாள் களத்து மேட்டுக்குப் போனார். பொதுவாக அவர்